Friday 17 February 2012

அதிரடி எடைக் குறைப்பு..!

நாம் அனைவரும் அதிரடி விலைகுறைப்பு பற்றித் தானே கேள்வி பட்டு இருக்கோம் ...! இது இப்போது உலகத்தில் பிரபலமாக இருக்கும் எடைக் குறைப்பு முறை பற்றிய பதிவு..!

ஜி.எம்.டயட் ;


கார்கள் மற்றும் மோட்டார் பாகங்கள் தயாரிப்பில் நம்பர் ஒன் நிறுவனமான ஜெனரல் மோட்டார் தன் ஊழியர்களுக்காக கொண்டு வந்த டயர் சார்ட் தான்  ஜி.எம்.டயட்.அமெரிக்காவில் உள்ள அக்ரிகல்சர் அண்ட்ஃ புட் அண்ட் டிரக் அட்மினிஸ்ட்ரேஷன் டிபார்ட்மென்ட் (Agriculture and food and drug administration) இந்த ஃ புட் சார்டை அங்கீகரித்துள்ளது 

ஒரே வாரத்தில் ஐந்து கிலோ எடைக்குறைப்புக்கு உத்திரவாதம் என்ற ரிசல்ட் ஆச்சரியப்படும் படி இருக்கவே,இப்போது உலகம் முழுவதும் ஹிட் அடித்துக் கொண்டு இருக்கிறது.  

இதற்கான நிபந்தனை இந்த டயட்டை எடுத்துக் கொள்பவர்கள் எந்த வித உடல் நோய்களும் இல்லாமல் இருத்தலும்,ஒரு நாளைக்கு மூன்று லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடித்தாலும் ஆகும்.

இனி ஒரு வாரத்திற்கான சார்ட்..
1.வாழைப்பழம் தவிர்த்து மற்ற எல்லாப் பழங்களையும் நாள் முழுக்க எவ்வளவு வேண்டுமானானும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம் .(உடனே பலாப்பழம் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாமா எனக் கேட்கக் கூடாது )
2 .அவித்த உப்பு சேர்த்த உருளைக்கிழங்கு சாப்பிடலாம்.தவிர சமைத்த மற்றும் சமைக்காத காய்கறிகளை (சாலட்டுக்களை ) எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.(இந்த இடத்தில் இது எல்லாம் சாப்பிட்ட பின்பா அல்லது முன்பா என்ற கேள்வி வரக்கூடாது )
3 .பழங்கள் காய்கறிகளை எவ்வளவு முடியுமோ சாப்பிடலாம் . உருளைக்கிழங்கு, வாழைப்பழம் தவிர .
4 .வாழைப்பழங்கள்,மூன்று டம்ளர் பால்,இரவுக்கு கொஞ்சம் சூப் (இப்படியெல்லாம் இருந்து உடம்பைக் குறைக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி உங்கள் மனதிற்குள் வந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை)
5 .வெஜிடேரியன் நபர்கள் ஒரு கப் சாதம்,ஆறு பெரிய தக்காளி,சாப்பிடலாம். நான்வெஜிடேரியனாக இருந்தால் பீஃ ப் (மாட்டுக்கறி )  ஆறு பெரிய தக்காளி,  சாப்பிடலாம்.எவ்வளவு முடியுமோ அவ்வளவு தாராளமாக தண்ணீர் அருந்தலாம்.(என்ன ஒரு தாராளமான மனம் பாருங்கள் )
6 .வெஜிடேரியன் நபர்கள்  ஒரு கப் சாதம் (காய்கறிகளை) சமைத்தோ ,சாலட்டுகளாகவோ,எவ்வளவு முடியுமோ சாப்பிடலாம்.   நான்வெஜிடேரியனாக இருந்தால்  ஒரு கப் சாதம் ,  பீஃ ப் (மாட்டுக்கறி ) இது தான் முழுநாளுக்கான உணவு (என்ன ஒரு பெருந்தன்மை )
7 .ஒரு கப் சாதம்,நிறைய பழச்சாறு சமைத்த காய்கறிகள் இவற்றை முடிந்த அளவு சாப்பிடலாம்.

 தேவை உள்ளவர்கள் பயன் படுத்தி வெற்றி அடைய வாழ்த்துக்கள்..! 

சகோதரி.
ஆயிஷா பேகம்.

8 comments:

  1. ஆஹா! இந்த பகிர்வை மூன்று வருடங்களுக்கு முன்பே நான் தமிழ் குடும்பம் என்ற தளத்தில் பகிர்ந்துள்ளேன்.மீண்டும் பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது.நல்ல பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

      ஒ..இது இந்த மாதம் அவள் விகடனில் (28-2-12) வந்துருக்கு..படிச்சதும் பிடிச்சுச்சு.சரி யாருக்காவது பயன் படுமேன்னு தான் போஸ்ட் பண்ணினேன்..நீங்க போட்டு இருக்கிறத பார்த்திருந்தா அதையே உங்க பேர் போட்டு காப்பி -பேஸ்ட் பண்ணிருப்பேன்..டைப் அடிக்கிற வேல மிச்சம் ..ஹி ஹி ஹி ..

      வருகைக்கு நன்றி சகோ.

      Delete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வ அழைக்கும் சலாம் வரஹ்.

      வருகைக்கு நன்றி சகோ.

      Delete
  3. நேற்று இங்கு பதில் போட்டேனே ஏன் பப்லிஷ் ஆகல

    என்பக்கம் கொஞ்சம் வாங்க விருதை பெற்று கொள்ளுஙக்ள்
    பயனுள்ள பல பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

      இங்க காணல சகோ.நேற்று ஆமினா சகோவோட கமென்ட் போஸ்ட் ஆகல ஆனா மெயில்ல இருதுச்சு.பிறகு காப்பி -பேஸ்ட் பண்ண சொன்னாங்க பண்ணினேன்.

      இன்னும் சரியா புரிபடல.என்ன பண்ணனும்னு.
      வருகைக்கும்,வாழ்த்துக்கும்,விருதுக்கும்,நன்றி சகோ.

      Delete
  4. அஸ்ஸலாமு அலைக்கும்...
    இன்னிக்குத்தான் உங்க தளத்துக்கு வந்தீக்குறேன்....
    இனி .இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து வருவேன்.
    நல்ல பகிர்வு தோழி....

    ReplyDelete
    Replies
    1. வ அழைக்கும் சலாம் வரஹ்..

      தங்களின் முதல் வருகைக்கும்,கருத்துக்கும்,இறை அருளால் இனி தொடர்ந்து வருவதாக சொன்னதற்கும் மிக்க நன்றி தோழி..:-)))
      .

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...