Sunday, 17 June 2012

திருந்த மாட்டீர்களா சகோதரிகளே ???

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..


சமீபத்தில் ஒரு பத்திரிகையில் வந்த செய்தியின் அடிப்படையில் இந்த பதிவு..ஃபேஸ்புக் மூலம் நடந்த மற்றொரு பலாத்காரமும், கொலையும்..!


பிரமீளா என்ற இளம் பெண் அவர் வீட்டில் தனியாக இருக்கும் போது பலாத்காரம் செய்யப்பட்டு கொலையுண்டு கிடந்தார், என்பது தான் அச் செய்தி..போலீசாரின் கேள்விகளுக்கு பதிலளித்த தந்தை தன் மகள் வெளியில் எங்கும் போகாதவள் என்றும் அவளிடம் இருக்கும் ஒரே கெட்ட பழக்கம் எந்நேரமும் ஃ பேஸ்புக்கில் இருப்பதும் தன்னுடைய ஒவ்வொரு செய்கைகளையும், அதில் பதிவு செய்வது மட்டும் தான் என்பது..

அப்பெண்ணின் கம்ப்யூட்டரை ஓபன் செய்து பார்த்ததில் கடைசியாக இருந்த பதிவில் இங்கு காலிங்பெல் அடிக்கிறது யார் என்று பார்த்து விட்டு வருகிறேன் என்று இருந்தது..அதற்கு லைக் போட்டவர்களை முழுமையாக விசாரிக்கும் போது அவர்கள் பெண்கள் பெயரில் இருக்கும் ஆண்கள் என தெரிய வந்து, அவர்களை பிடித்து விசாரிக்கும் போது ஆமாம் நாங்கள் தான் அக்கொலையை செய்தோம் என்ற உண்மையை ஒப்பு கொண்டுள்ளார்கள்..

அவர்களின் வாக்குமூலம்..         
நாங்கள் பெண்கள் பெயரில் மெயில் ஓபன் செய்து கொண்டு அதன் மூலம் ஃபேஸ்புக்கில் பெண்களின் ஃப்ரெண்டாக சேர்ந்து கொள்வோம்.சில பெண்கள் தன் ஒவ்வொரு செயலையும் ''வால்''லில் பதிவு செய்வார்கள்..அவர்களிடம் நல்ல முறையில் பழகி அவர்கள் நாங்கள் தனியாக இருக்கிறோம் என பதிவு செய்யும் போது அவர்கள் வீட்டுக்கு கொரியர் கொடுப்பது போல போய் கத்தியை காட்டி அவர்களை அனுபவித்து விடுவோம்..இது போல பல முறை நடத்தி இருக்கிறோம்..ஆனால் யாரும் இது வரை போலீசுக்கு போனதில்லை..அதே போல பிரமீளா வீட்டுக்கும் போனோம்..ஆனால் அந்த பெண் சுதாரித்து போன் செய்ய போனதால் நாங்கள் கத்தியை வைத்து அந்த பெண்ணின் கையை வெட்டி விட்டு ரத்தம் சொட்ட சொட்ட அந்த பெண்ணை அனுபவித்தோம்..பிறகு அந்த பெண் காட்டி கொடுப்பார் என தோன்றியதால் கழுத்தில் கத்தியை வைத்து அறுத்து விட்டோம் என்பது தான் அந்த வாக்கு மூலம்..இதே போல எத்தனை மோசமான கதைகள் இந்த ஃ பேஸ்புக் மூலம்..! ஆனாலும் பெண்களுக்கு புத்தி வந்த மாதிரி தெரிய வில்லை ..இந்த விசயத்தில் தன் சுய அறிவை உபயோகிப்பதில்லை என்ற முடிவில் இருப்பார்கள் போல உள்ளது.. ! தன்னை மிகவும் விரும்பும் தாய்,தந்தை உடன் பிறந்தவர்கள்,தாத்தா,பாட்டி,மற்றும் உறவுகளுடன் பேச முடியாத இவர்கள் போலித்தனமான பாசங்களையும்,காரியத்திற்காக புகழப்படும் புகழ்ச்சிகளையும்,ஒன்றுக்கும் உதவாத நட்புகளையும் உண்மை என நம்பி கொண்டு காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை தன் ஒவ்வொரு அசைவையும் பதிவு செய்யும் இவர்களை நினைத்தால் மிகவும் கவலையாகவும் கோவமாகவும் வருகிறது..!

இதன் மூலம் வரும் பின்விளைவுகள் தெரிந்தே சில பேர்..! தெரியாமலே சில பேர்..! எல்லாஇடங்களிலும் ஆட்டு முகம் பொருத்திய ஓநாய் மனிதர்கள் இருக்கிறார்கள், என தெரியாமல் போலித்தனமான,கேவலமான மனதுடைய  மனிதர்களை நம்பி தன் புகைப்படம் முதற்கொண்டு தன் வீட்டு விவரங்கள் யாவற்றையும் பொதுவில் பந்தி வைக்கும் இவர்களை என்ன செய்வது..? இதில் யார் நல்லவர் யார் கெட்டவர் என எப்படி அறிவது..? 

அப்படி தனக்கு வேண்டியவர்களுக்கு தெரிவிப்பதற்கு தான் நிறைய தனிப்பட்ட  வழிமுறைகள் இருக்கிறதே பின் என்ன வந்தது இவர்களுக்கு..? அந்த காலத்தில் படிக்காதவர்களான நம் பாட்டிகளிடம் இருந்த ,எதை வெளியில் சொல்ல வேண்டும்,எதை வெளியில் சொல்ல கூடாது என்ற தெளிவும்,அறிவும்,அதிகம் படித்த இந்த மாதிரி பெண்களிடம் இல்லை என்பதே உண்மை .இவர்கள் நிஜத்துக்கும் ,நிழலுக்கும் வித்தியாசம் தெரியாத படித்த மேதைகள்..! 

இன்னும் வேறு வகை பெண்கள் சிலர் இங்கு உண்டு ..காதல் மொழி பேசி வரும் நபரிடம் தன்னை பற்றி அனைத்தையும் சொல்லி உருகி உருகி காதலித்து பின் வெளி இடங்களில் இருவரும் பல முறை சந்தித்து,தன் கற்பை இழந்த பின் அவனுக்கு இவள் அலுத்து அவன் தன் சுயரூபத்தை காட்டியதும் கண்ணீர் விட்டு அழுது மனம் நொந்தபடி கிடப்பது என்று...! இதில் சில தைரியமான பெண்கள் தன் முகத்தை மூடி கொண்டு போலீசில் புகார் கொடுக்க வரும் போது உங்கள் சிந்திக்கும் திறனை எங்கு அடகு வைத்தீர்கள் என கேட்க தோன்றுகிறது...! 

இரைக்காக காத்து இருக்கும் வேடன் போல, பெண் மூலம் தேவையை விரும்புபவன், தேன் சொட்டும்,ஆசை வார்த்தைகளையும்,அதிக படியான வீண் புகழ்ச்சியையும்,பசப்பலான நடிப்பையும் வெளிப்படுத்த தான் செய்வான்..அவனுக்கு தேவை இரை ..அதற்காக என்ன வேண்டுமாலும் செய்வதற்கு தயாராக தான் இருப்பான்..நோக்கம் நிறைவேறியதும் வேறு ஒரு புதிய இரையை தேட போய் விடுவான்..இந்த விஷயத்தில் அதிகம் பாதிக்க படுவதென்னமோ பெண் தான்..வாழ்வில் சில விஷயங்களை நாம் இழந்தால் இழந்தது தான்..! அதை எதை கொண்டும் ஈடு செய்ய முடியாது..! 


தவறு செய்யும் சில ஆண்களை குற்றம் சொல்லும் இந்த இடத்தில் இதே போல குற்றம் செய்யும் பெண்களையும் குறிப்பிட வேண்டும்.. தன் அழகால் வசீகர பேச்சால் ஆண்களை தன் வலையில் விழ வைத்து அவர்களின் பணத்தை சூறையாடும் பெண்களும் அதிகரித்து விட்டார்கள்...! தன் குடும்பத்தை விட்டு தன்னந்தனியாக,தனக்கு என்று பெரிதாக ஆசை படாமல் தன் குடும்ப கஸ்டத்தை மட்டுமே மனதில் இருத்தி வாழ்ந்து கொண்டிருக்கும் சகோதரர்கள் பலர் இங்கு உண்டு..

வேறு எந்த கெட்ட பழக்கமும் இல்லாத சில ஆண்கள் கூட,பெண்களின் மோக வலையில் சிக்குவது என்பது நாம் அனைவரும் நடைமுறையில் அறிந்த ஒன்று..இந்த பலகீனம் உள்ளவர்கள் தான் இந்த மாதிரி பெண்களின் இலக்கு ..அவர்கள் தன் உதிரத்தை வியர்வையாக்கி சம்பாதிக்கும் பணத்தை இந்த பெண்கள் தன் பேச்சு திறமையாலும்,தன் கவர்ச்சிகரமான தோற்றத்தாலும் எளிதில் கவர்ந்து விடுகின்றனர்..இதை வெளியில் சொல்ல முடியாமல் தவித்து கொண்டிருக்கும் அப்பாவிகள் பலர்..! சில பெண்கள் சமத்துவத்தை இந்த விஷயத்திலும் காட்ட ஆரம்பித்து விட்டார்கள்..ஆண்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய காலம் இது..!  

இந்த ஃ பேஸ்புக்கால் நன்மை எதுவும் இல்லையா..? என்றால் கட்டாயம் இருக்கிறது..! இங்கு எத்தனையோ சகோதர சகோதரிகள்,தங்களுடைய பல வேலை பளுக்களுக்கு இடையில் நல்லதை மட்டுமே கொடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கோடு செயலாற்றி கொண்டு இருக்கிறார்கள்..! மேலும்  இதன் மூலம் பல நல்ல சமுதாய மாற்றங்களும்,, கல்வி உதவிகளும்,உயிர் காக்கும் பல மருத்துவ தேவைகளும்,பலருக்கு சாத்தியமாகி இருக்கிறது ..எந்த ஒன்றும் நாம் பயன்படுத்தும் விதத்தில் இருக்கிறது என்பது போல இந்த ஃபேஸ்புக்கையும் நாம் பல நல்ல ஆக்கபுர்வமான விசயங்களை தெரிந்து கொள்வதற்கும்,பகிர்ந்து கொள்வதற்கும் பயன் படுத்தலாம்..

மேலும் இங்கு பல  நல்ல நட்புகள் உள்ளன.. நல்லதை எடுத்து சொல்லி அடுத்தவர் தவறு செய்யும் போது தனி பட்ட விதத்தில் திருத்தும் அருமையான நட்புகள் உண்டு..என்னை போல நல்ல நட்பின் மூலம் பல நல்ல விசயங்களை அறிந்து கொண்ட பலர் இங்கு உண்டு ..வரம்பு மீறாத தன்மையோடும் சரியான புரிதலோடும்,எந்த எதிர்பார்ப்பும் இல்லாத இறைவனுக்கு மட்டுமே பயந்து நட்பு கொண்ட பலர் இங்கு உண்டு ..

ஆனால் சமீப காலங்களாக கேள்வி படும் விசயங்கள் நன்மையை விட இந்த இடம் பல தப்பான செயல்களுக்கு தான் அதிகம் துணை போவதாக  தெரிகிறது..எல்லா இடத்திலும் எந்த வழியை தேர்ந்தெடுக்க போகிறோம் என்பது நம் கையில் இருக்கிறது..முக்கியமாக பெற்றோர்கள் தன் பிள்ளைகள் எந்த வழியில் இருக்கிறார்கள் என்பதை கண்டிப்பாக பார்க்க வேண்டும்..எந்த வழி சரியான வழி என்பதை சுட்டி காட்ட வேண்டிய பொறுப்பும் நம்மிடம் இருக்கிறது..

அனைவருக்கும் தெரிந்த உவமை தான் ஆனால் நல்ல உவமை :-
சேலை முள்ளில் மீது பட்டாலும் இல்லை,முள் சேலை மீது பட்டாலும் பாதிப்பு என்னவோ சேலைக்கு தான்..!

டிஸ்கி:-தன் பொறுப்புகளையும்,தன் கடமைகளையும்,புறக்கணித்து, நாளை இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமே என்ற நிலை மறந்து,இந்த மாய உலகத்தில் தன்னை முழுவதுமாக மூழ்கடித்து தன் வாழ்வை தொலைத்து கொண்டிருக்கும் யாராவது ஒரு சகோதரி இந்த பதிவை படித்து விட்டு தன்னை மீட்டெடுத்து கொண்டார் எனில் அது தான் இந்த பதிவின் நோக்கமும் வெற்றியும்..!

நன்றி---சிநேகிதி பத்திரிகை..  
உங்கள் சகோதரி..
ஆயிஷா பேகம்..

31 comments:

 1. /* இந்த ஃ பேஸ்புக்கால் நன்மை எதுவும் இல்லையா..? என்றால் கட்டாயம் இருக்கிறது..! */

  எங்க இருக்கு?? அப்படி ஒன்னும் தெரியல... ஒரு சில விதி விலக்குகள் இருக்கலாம்.... விதிவிலக்குகள் விதி ஆகிவிட முடியாது....

  ReplyDelete
  Replies
  1. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

   விதி விலக்குகள் விதி ஆக முடியாது தான்..ஆனால் நாம் நினைத்தால் எல்லா இடத்தையும் ''விளக்காக்க'' முடியும்....ஃபேஸ்புக்கில் ஒரு அருமையான குழு ஆரம்பித்து அதில் பல நல்ல விசயங்களை பலரும் பயன் அடையும் வண்ணம் பகிரும் நீங்களே இப்படி சொல்வது ஆச்சர்யமா இருக்கு..:)

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ..:-))

   Delete
 2. நேரில் ஒரு ஆணிடம் பேசும்போது என்ன வரைமுறைகள் கொள்வோமோ அதையே இணையத்திலும் கொள்ள வேண்டும். ஆனால், இப்படி பெண் பெயரில் ஆண்கள் வலம் வருவதைப் புரிந்து, இணையத்தில் பெண்களிடமும்கூட அதுபோல கவனமாக இருப்பது நல்லது.

  ஆனாலும், முகவரிகளை ஏன் தருகிறார்களோ? என்னவோ போங்க...

  ReplyDelete
  Replies
  1. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

   //ஆனாலும், முகவரிகளை ஏன் தருகிறார்களோ? என்னவோ போங்க.//

   ஆமாம் சகோ இப்படி பட்ட பெண்களின் எதிர்காலத்தை நினைத்தால் கவலையா இருக்கு..:(

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ..:-))

   Delete
 3. அவரவர் பாதுகாப்பு அவரவர் கைகளில் தான்.. முகவரி கொடுக்கும் அளவுக்கா முகம் தெரியாதவர்களீடம் நட்பு பேண முடியும்???

  அருமையான எச்சரிக்கை கட்டுரை

  ReplyDelete
  Replies
  1. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

   //அவரவர் பாதுகாப்பு அவரவர் கைகளில் தான்//

   மிக அருமையான வார்த்தை ஆமினா..இதை சரியாக புரிந்து கொள்ளாததால் தான் நாட்டில் இத்தனை அனர்த்தங்கள்..

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆமினா..:-))

   Delete
 4. அஸ் ஸலாமு அலைக்கும் சகோ,
  ஃபேஸ் புக் உபயோகிக்க தெரிந்த அளவு, தன்னுடைய மூளையை உபயோகிக்க தெரியாமல் போனதே என்றுள்ளது.... சுப்ஹானல்லாஹ்.... இப்படியான நட்புக்கள் தேவையா? பெண்ணாகவே இருந்தாலும் முகம் பார்க்காமல், உண்மை நிலை தெரியாமல் இப்படி எல்லோருடனும் எல்லா விஷயத்தையும் பகிர முனைவதும் சரியா??? ப்ச்...... படித்ததில் இருந்து மனமே சரியில்லை சகோ. படித்த பெண்கள்தானா இவர்கள் என்றுள்ளது. எனினும், எச்சரிக்கை பதிவுக்கு மிக மிக நன்றி சகோ. யாரேனும் ஒரு சகோ வழி தவறாமல் இருந்தாலுமே நமக்கு போதும்தான். அல்ஹம்துலில்லாஹ்.

  ReplyDelete
  Replies
  1. வ அழைக்கும் சலாம் வரஹ் சகோ..

   //படித்ததில் இருந்து மனமே சரியில்லை சகோ. படித்த பெண்கள்தானா இவர்கள் என்றுள்ளது//

   உண்மை தான் சகோ..மனம் சரியில்லாததோடு மிக கோவமும் வருகிறது...இங்கு பத்திரிகைகளில் தினம் இது குறித்து செய்திகள் வந்த வண்ணம் தான் உள்ளன..தெரிந்தும் திருத்தி கொள்ள வில்லை என்றால் என்ன செய்வது..சில பெண்களில் ''வால்'' எல்லாம் பார்க்க முடியாது சகோ..மொத்தத்தில் உலகம் போற போக்கு சரியில்லை..:(

   //யாரேனும் ஒரு சகோ வழி தவறாமல் இருந்தாலுமே நமக்கு போதும் தான். அல்ஹம்துலில்லாஹ்.//

   ஆமாம்.அந்த உணர்வு தான் எழுத சோம்பேறித்தனப்படும் என்னை ஒரே நாளில் எழுத வைத்தது..

   தங்கள் வருகைக்கும் அருமையான கருத்துகளுக்கும் மிக்க நன்றி சகோ..:-))

   Delete
 5. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி
  அருமையான பதிவு..இளம் பெண்கள் கட்டாயம் உணர வேண்டும்.

  அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ;சு.

  இருந்தாலும் நல்ல பலன்களை நானும் அடைந்து கொண்டேன். பேஸ்புக்கில் கிடைத்த நல்லுபதேசங்களும் நல்ல சகோதரத்துவமும் எனக்கு கிடைத்துள்ளது.அல்ஹம்துலில்லாஹ்

  ஹிஐ◌ாப்பை தவிர்த்து பெண்கள் பகிரும் ஒவ்வொரு பகிர்விற்கு மறுமை நாளில் பதில் சொல்ல தயாராகட்டும்

  ReplyDelete
  Replies
  1. வ அழைக்கும் சலாம் வரஹ் பஸ்மின்..

   //பேஸ்புக்கில் கிடைத்த நல்லுபதேசங்களும் நல்ல சகோதரத்துவமும் எனக்கு கிடைத்துள்ளது.அல்ஹம்துலில்லாஹ்//

   எனக்கும் அப்படி தான்..:-))

   தங்கள் வருகைக்கும் அருமையான கருத்துகளுக்கும் மிக்க நன்றி பஸ்மின்..:-))

   Delete
 6. அஸ்ஸலாமு அலைக்கும் ஆயிஷா!

  ஃபேஸ்புக்கில் நல்ல விஷயங்களும் இருந்தாலும், அதில் நடக்கும் இதுபோன்ற பல விஷயங்கள் நமக்கு மிகுந்த வெறுப்பைதான் ஏற்படுத்துகின்றன :( அதனாலேயே ஃபேஸ்புக் பக்கம் போக இன்ட்ரஸ்ட் வருவதில்லை. தோழிகள் பலரும் அங்கு வரச் சொல்லி அழைப்பதால், இன்ஷா அல்லாஹ் வருங்காலத்தில் அங்கு வர வாய்ப்பை நான் ஏற்படுத்திக் கொண்டாலும், 'அதைவிட்டால் வேறு தஃவா களம் இல்லையா நமக்கு'ன்னுதான் இப்போதைக்கு தோன்றுகிறது. நல்ல பகிர்வுக்கு ஜஸாகல்லாஹ்!

  ReplyDelete
 7. வ அழைக்கும் ஸலாம் சகோ..

  நீங்கள் சொல்வது போல இங்கு நடக்கும் விஷயங்கள் வெறுப்பை தந்தாலும்,வெகு எளிதில் நாம் சொல்லும் செய்தி சென்று அடையும் இடத்தை நாம் ஏன் நல்ல முறையில் பயன் படுத்த கூடாது என்ற எண்ணமும் இங்கு வருகிறது..உங்களை போன்ற மார்க்கத்தில் அதிக தெளிவு உள்ளவர்கள் வந்தால் எங்களை போன்றவர்களுக்கு கூடுதலாக நன்மை கிடைக்கும்..

  நமது செய்தி யாராவது ஒருவருக்காவது பலன் கொடுத்தது எனில் ,அது நமக்கு நன்மை தானே..இன்ஷா அல்லாஹ் வாருங்கள் சகோ..ஓய்வு நேரத்தில் சிறிது இங்கு ஒதுக்குங்கள்..:-))

  தங்கள் வருகைக்கும் அருமையான கருத்துகளுக்கும் மிக்க நன்றி சகோ..:-))

  ReplyDelete
 8. சிறந்த பதிவு. விழிப்புணர்வு பெற வேண்டியவர்கள் அவசியம் படிக்க வேண்டிய பதிவு. பகிர்வுக்கு வாழ்த்துக்கள் சகோ.

  ReplyDelete
  Replies
  1. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

   தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ..:)

   Delete
 9. நல்ல விழிப்புணர்வு பதிவு...!சகோதரிக்கு நன்றிகள்! இதைப்படித்து சிலர் திருந்தினால் சரி!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரரே..:-))

   Delete
 10. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

  மிக மிக அவசியமான பதிவு சகோதரி! அல்லாஹ் தங்களுக்கு அருள் புரிவானாக! ஆனால் அதே பேஸ்புக்கை நாம் நினைத்ததுபோல் நன்மையான காரியத்திற்கும் பயன்படுத்தலாம். இறைவன் அருளால் நான் செய்து கொண்டும் இருக்கிறேன். நிறைய மார்க்க சகோதரிகள் மார்க்கம் சம்பந்தமான கேள்வி சந்தேகங்களை எதிர்கொண்டு வருகிறேன். பேஸ்புக்கை பயன்படுத்துபவரின் எண்ண ஓட்டத்தைப் பொறுத்தது அது. அல்லாஹ் நம் அனைவரையும் தீயதான காரியங்களிலிருந்து விலக்கி, நன்மையான காரியங்களில் ஆர்வத்துடன் செயல்படும் பாக்கியத்தைத் தருவானாக! ஆமீன்!!!

  இஸ்லாம் குரல் பேஜ் பேஸ்புக் லிங்க்.

  https://www.facebook.com/islamkural.page

  ReplyDelete
  Replies
  1. வ அழைக்கும் சலாம் வரஹ்..

   //பேஸ்புக்கை நாம் நினைத்ததுபோல் நன்மையான காரியத்திற்கும் பயன்படுத்தலாம். இறைவன் அருளால் நான் செய்து கொண்டும் இருக்கிறேன் பேஸ்புக்கை பயன்படுத்துபவரின் எண்ண ஓட்டத்தைப் பொறுத்தது அது.//

   மாஷா அல்லாஹ்..மிக சரியான வார்த்தைகள் சகோ...

   //அல்லாஹ் நம் அனைவரையும் தீயதான காரியங்களிலிருந்து விலக்கி, நன்மையான காரியங்களில் ஆர்வத்துடன் செயல்படும் பாக்கியத்தைத் தருவானாக//ஆமின்..

   தங்களின் வருகைக்கும் ,அருமையான கருத்துக்கும் ,துஆக்கும்,ஜஸாகல்லாஹ் சகோ..:-))

   Delete
 11. நல்ல அருமையான பதிவு. கண்டிப்பாக இது நமது சமுதாய பெண்கலுக்கு அவசியம் தேவை................பகிர்ந்ததற்க்கு நன்றி........!!!!!!!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 12. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

  தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ..:))

  ReplyDelete
 13. நனறி தோழி அருமையான பதிவு உங்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் அது குறைவு தான்

  ReplyDelete
 14. தங்களின் வருகைக்கும்,அதிகப்படியான பாராட்டுக்கும் நன்றி தோழி..:-))

  ReplyDelete
 15. //எந்த கெட்ட பழக்கமும் இல்லாத சில ஆண்கள் கூட,பெண்களின் மோக வலையில் சிக்குவது என்பது நாம் அனைவரும் நடைமுறையில் அறிந்த ஒன்று..இந்த பலகீனம் உள்ளவர்கள் தான் இந்த மாதிரி பெண்களின் இலக்கு ..அவர்கள் தன் உதிரத்தை வியர்வையாக்கி சம்பாதிக்கும் பணத்தை இந்த பெண்கள் தன் பேச்சு திறமையாலும்,தன் கவர்ச்சிகரமான தோற்றத்தாலும் எளிதில் கவர்ந்து விடுகின்றனர்..இதை வெளியில் சொல்ல முடியாமல் தவித்து கொண்டிருக்கும் அப்பாவிகள் பலர்..! சில பெண்கள் சமத்துவத்தை இந்த விஷயத்திலும் காட்ட ஆரம்பித்து விட்டார்கள்..ஆண்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய காலம் இது..! ///

  நிதர்சனமான உண்மை ஆண் பெண் பாகுபாடின்றி சாடியிருக்கும் உங்கள் எழுத்துகளுக்கு எனது வாழ்த்துகள்... தொடரட்டும் உங்கள் எச்சரிக்கை ஆக்கங்கள்.. அல்லாஹ் உங்கள் மீது அவனது ரஹ்மத்தை பொழிவானக...

  ReplyDelete
  Replies
  1. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

   /////அல்லாஹ் உங்கள் மீது அவனது ரஹ்மத்தை பொழிவானக...////ஆமீன்..

   தங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும் ,துஆக்கும் மிக்க நன்றி சகோ..:-))

   Delete
 16. எண்ணத்தின் அடிப்படயில்தான் செயல் அதற்கேற்பதான் கூலியும்...... உங்கள் சமூக அக்கறை மேலும் ஓங்க எல்லாம் வல்ல இறைவன் அருல் பொழியட்டும் ஆண் பெண் பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவாக கருத்துகளை கொடுத்திருபதற்கு நன்றி.... பாரக்கல்லாஹ் ஃபீகும்....

  ReplyDelete
  Replies
  1. ஜஸாகல்லாஹ் சகோ..:-))

   Delete
 17. சக்கரை வியாதியுள்ளவர்கள் சக்கரை சாப்பிடக் கூடாது என்று நன்கு தெரிந்தும் அவர்கள் சக்கரையை விரும்பி சாப்பிடுவதை நீங்கள் அவதானிக்க வில்லையா? நீங்கள் எவ்வளவு தான் விபரீதங்களை எடுத்துக் காட்டினாலும் அதற்கு அடிமையானவர்களால் அதிலிருந்து மீளுவது கூடாத காரியம். ஆகவே இஸ்லாம் ஏதாவது மீட்பு வழிகளை காட்டியிருந்தால் அவற்றையும் சுட்டிக் காட்டினால் நலமாயிருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..
   ///நீங்கள் எவ்வளவு தான் விபரீதங்களை எடுத்துக் காட்டினாலும் அதற்கு அடிமையானவர்களால் அதிலிருந்து மீளுவது கூடாத காரியம்.///

   நம் பார்வைக்கு தவறு என்று தெரிந்த ஒன்றை சொல்லி வைப்போம்...அதற்கு மேல் நாம் என்ன செய்ய முடியும்..

   ///இஸ்லாம் ஏதாவது மீட்பு வழிகளை காட்டியிருந்தால் அவற்றையும் சுட்டிக் காட்டினால் நலமாயிருக்கும்.///

   நம் மார்க்கத்தில் இல்லாத ஒன்றா சகோ..நிறையா போடலாம் ...சுட்டி காட்டியதற்கு நன்றி..

   தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ..:))

   Delete
 18. தனியாக குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவுக்கு பதிவை நன்றாக அலசி இருக்கீங்க மாஷா அல்லாஹ் :-).

  ReplyDelete
  Replies
  1. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

   தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ..:))

   Delete
 19. Casino.com - Mapyro
  Casino.com. Find Casino.com address, phone number, 광명 출장마사지 hours, 오산 출장안마 map, 경주 출장안마 opening 광주 출장마사지 hours and map directions. Rating: 2.9 · ‎9 votes 구리 출장샵

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...