அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
இப்போது உலகம் முழுவதும் வெவ்வேறு வடிவங்களில்,வெவ்வேறு பெயர்களில் வெளி வந்து கொண்டிருப்பது ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் தனி மனித உறவுகளை சீர்குலைக்கும் நிகழ்ச்சிகள்..! தனிப்பட்ட மனிதர்களின் கண்ணீர் ,துயரம்,ஆவேசம், என்று அவர்களின் அந்தரங்கத்தை கூறு போட்டு காசு பார்க்கும் சேனல்களின் கண்டுபிடிப்பு தான் இந்த ரியாலிட்டிஷோக்கள்..!
மாமியார் , மாமனார் , மருமகன் , மருமகள், அம்மா , பிள்ளை , பெண் ,நாத்தனார், மச்சினர், அண்ணன் மனைவி ,தம்பி மனைவி ,என ஒரு உறவு விடாமல் அனைவரையும் அழைத்து அவர்களை எதிர் எதிரே உட்கார வைத்து அவர்களின் குறைகளை கேட்கிறோம் என்ற பெயரில், தனிப்பட்ட உணர்வுகளை வெளிகொண்டு வருவதே இதன் அடிப்படை..!தன் சேனலின் டி.ஆர்.பி ( டெலிவிஷன் ரேட்டிங் பாயின்ட் ) என்னும் வழிமுறையை அதிகப் படுத்த எல்லாவித முறையையும் கையாள ஒவ்வொரு சானலும் தயாராக இருக்கிறது..! இவர்களுக்கு சமுதாயத்தின் மீது எந்த பொறுப்போ ,அக்கறையோ கிடையாது..! அவர்களின் நோக்கம் எல்லாம் வெறும் வர்த்தகம் மட்டுமே.
பொதுவாக குடும்பத்தில் ஒரு பிரச்சனை என்றால் இரு தரப்பினரும் மனம் விட்டு பேசினாலே பாதி பிரச்னை சரியாகி விடும்..! குடும்பத்தில் இருக்கும் வீட்டு பெரியவர்களும், சம்பந்தப்பட்டவர்களும்,உட்கார்ந்து பேசி ,எது சரி அல்லது எது தவறு என்று கலந்து ஆலோசிப்பது தான் சரியான வழி முறையாக இருக்கும்..! ஆனால் இதில் எந்த விதத்திலும் சம்பந்த படாத, அவர்களை பற்றி எதுவும் தெரியாத மூன்றாம் நபரின் தலையீடு ஒரு மணி நேரத்தில் குடும்ப விவகாரங்களை எப்படி தீர்க்க முடியும் என்பது தான் தெரிய வில்லை.
சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் ,உறவுகளின் பிரச்சனையை சரி செய்கிறோம் என்ற பெயரில் நடந்த ஒரு ரியாலிட்டி ஷோவை பார்க்க நேரிட்டது...! கணவர்கள் ஒரு புறம், மனைவிகள் மறுபுறம், நிகழ்ச்சியை நடத்துபவர் என்ற பெயரில் ஒருவர்..! அவர் சானலில் வாங்கும் லட்சக்கணக்கான சம்பளத்திற்கு , உண்மையாக உழைக்கும் விதத்தில் அவரின் கேள்விகள், இருதரப்பினரையும் தூண்டும் விதத்தில் இருந்தது...! அவர் அப்படி கேட்டால் தான் நிகழ்ச்சி சூடு பிடிக்கும்,வாக்கு வாதங்கள் அனல் தெறிக்க நடக்கும் என்பது அவருக்கு நன்கு தெரியும்.! அவர் எதிர் பார்ப்பதும் அது தான்.
அதில் ஒரு கேள்வி..! கணவனிடம் மனைவிக்கு பிடிக்காத விஷயம்..!அதே போல மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத விஷயம்..! என்று. ..சொல்லவா வேண்டும் இந்த கேள்விக்கு பதில்களை..! போட்டி போட்டு கொண்டு சரமாரியாக கருத்துக்கள் வெளி வந்து கொண்டிருந்தது .அதில் ஒரு பெண் சொல்ல தகவல் உண்மையில் தூக்கிவாரிப் போட்டது..! இதை சொல்லி விட்டு பெரிய சாதனை செய்த மாதிரி பெரிய சிரிப்பு வேறு அந்த பெண்ணுக்கு..!அதை பார்த்ததும் யார் பெற்ற பிள்ளையோ ஆனால் கன்னத்தில் ஒன்று போடலாம் என்று தோன்றியதை தவிர்க்க முடிய வில்லை..! தன் கணவரைப் பற்றிய மிக சென்சிடிவான விஷயம் குறித்து ,அவ்வளவு எளிதாக யாருக்கும் வெளி தெரியாத,தெரிய வேண்டிய அவசியம் இல்லாத ஒரு தகவல் அவர் சொன்னது...! இந்த பதிலை அந்த கணவரும் கேட்டு அதிர்ச்சி அடைந்தார் என்பது அவரின் முகத்தைப் பார்த்தால் தெரிந்தது.
எது அந்த பெண்ணை இப்படி தன் கணவரின் ஒரு அந்தரங்கமான விஷயத்தை லட்சக்கணக்கானவர்கள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் சொல்ல வைத்தது..? இதனால் அவர் அடைய போவதென்ன..? சொன்னதால் இவரின் பிரச்னை தீரப் போகிறதா..? வீட்டில் கணவனும் மனைவியுமாக உட்கார்ந்து பேசி தீர்க்க வேண்டிய ஒரு விஷயத்தை இப்படி பகீரங்கப் படுத்த வேண்டிய தேவை என்ன.? தன் முகம் தொலைக்காட்சியில் தெரிய வேண்டும் என்பதற்காக இந்த அளவு தன் தரத்தையும் ,தன் கணவனின் செயலையும் பறை சாற்ற வேண்டுமா ..? இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் இருவரும் சேர்ந்து தானே இருக்க வேண்டும்..? இந்த நிகழ்ச்சி அவர்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்காதா..? முன் போல அந்த கணவரால் அந்த பெண்ணுடன் இயல்பாக இருக்க முடியுமா ..? இது போன்ற பல கேள்விகள் மனதில் எழுவதை தவிர்க்க முடிய வில்லை.
கணவன் மனைவி உறவு என்பது எவ்வளவு அழகான ஆழமான உறவு..! மற்ற எல்லா உறவிலும் மாற்று எவருடனும் ஒப்பீடு செய்ய முடியும்..! ஆனால் இந்த உறவை எந்த உறவோடும் ஒப்பிட முடியாதே..! கருத்து வேறுபாடு இல்லாத கணவன் மனைவி யாரும் இங்கு உண்டா என்றால்,கண்டிப்பாக இருக்க முடியாது..! அப்படி இருப்பதற்கான சாத்தியமும் இல்லை என்பதே உண்மை...! இரு வேறு சூழ்நிலைகளில் வளர்ந்த ,வாழ்ந்த இரு உயிர்கள் ஓருயிராக வாழ ஆரம்பிக்கும் போது தொடக்கத்தில் பிரச்சனைகள் ஏற்படுவது என்பது மிக இயல்பான ஒன்று..! ஆனால் அதை எல்லாம் தாண்டி சரியான பரிதலும்,ஒருவரின் பால் ஒருவருக்கு இயல்பாகவே ஏற்படும் ஈர்ப்பும் ,நேசமும் இருந்து விட்டால் பிறகு எந்த வித பிரச்சனையும் அவர்களை ஒன்றும் செய்யாது.
அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள் (அல் - குரான்2:187)
இந்த ஒரு ஆழமான வசனத்தின் மூலமாகவே கணவன் மனைவி உறவு என்பது எப்படி பட்டது..! அது எப்படி இருக்க வேண்டும் என்பது நமக்கு உணர்த்தப் பட்டு இருக்கிறது..! ஆடை எப்படி நம் மானத்தை காக்கிறதோ அப்படி தான் கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் தன் துணையின் குறையை, அந்தரங்கத்தை , ரகசியத்தை,காக்க வேண்டியது கடமை ஆகும்...! நமக்கு இயற்கையாக ஏற்படும் சில தேவைகளை,
தேடல்களை ஹலாலான வழியில் பெற வேண்டும் என்றால் கணவன் மனைவி என்ற பந்ததால் மட்டுமே சாத்தியம்...! அது தான் இறை வகுத்த சட்டமும்.
குறை இல்லாத மனிதர் என்று இவ்வுலகில் யாரும் உண்டா..? அப்படி இது வரை யாரும் இருந்து இருக்கிறார்களா..? என்றால்அப்படி யாரும் இல்லை அப்படி யாரும் இருக்கவும் முடியாது ..! குறை, நிறை சேர்ந்தவன் தானே மனிதன்..! .தன் துணையின் குறை பிடிக்க வில்லை என்றால் அதை மெதுவாக மாற்ற முயல்வது தானே புத்திசாலித்தனம்..! அந்தக் குறையும் நம் வாழ்க்கைக்கோ , மார்க்கத்திற்கோ, பங்கம் விளைவிக்கக் கூடிய வகையில்இல்லை என்றால் அதை அப்படியே மாற்ற முயலாமல் ஏற்றுக் கொள்வதே சரி.
இங்கு முழுதாக, ஆணை அறிந்த பெண்ணும் இல்லை..! பெண்ணை, அறிந்த ஆணும் இல்லை என்பதே உண்மை..! அறிந்து கொள்வதும் அவ்வளவு எளிது இல்லை..! தேவையும் இல்லை..! இறையின் படைப்பு அப்படி தான் படைக்க பட்டிருக்கிறது..! ஆணின் இயல்பு தன்மை வேறு..! பெண்ணின் இயல்பு தன்மை என்பது வேறு..! இதை அவரவர் இயல்பு படி சரியாக புரிந்து கொண்ட ஆணும் பெண்ணும் தான் வெற்றியாளர்கள்...! இந்த சரியான புரிதல் என்பது ஒருவர் அடுத்தவர் மீதான நேசத்தையும்,மதிப்பையும், மரியாதையும் கொடுக்கிறது...! குறைகளை மன்னிக்க சொல்கிறது..!.இந்த ஒற்றுமையின் காரணமாக நல்ல அறிவான,பண்பான சந்ததிகளை கொடுக்க முடிகிறது.
இந்த மாதிரி ஷோக்களை பார்க்கும் போது..! பொதுவில் உணர்ச்சிவசப்பட்டு அவர்கள் வெளியிடும் வார்த்தைகளில் பொருட்டு விளையும் பின் விளைவுகளை நினைக்கும் போது அவர்களின் மீது பரிதாபமே வருகிறது. ஏற்கனவே உறவுகள் சிக்கலாகி கொண்டிருக்கும் காலம் இது...! உறவுகளின் எண்ணிக்கையும் சுருங்கி கொண்டு வருகிறது...! இதில் இருக்கும் உறவுகளையும்இல்லாமல் பண்ணுவதற்கு தேவையான எண்ணெயை ஊற்றி கண்ணுக்கு தெரியாமல் அதை பற்ற வைக்கும் வேலையை தான் சானல்கள் செய்து கொண்டு இருக்கின்றன.
ஒரு மனிதன் என்பதற்கு உரிய சரியான அர்த்தத்தோடு ஒருவன் வாழ வேண்டும் என்றால் அவன் அங்கம் வகிக்கும் பாத்திரம் ( மகன்,சகோதரன்,கணவன்,மாமா,மச்சான்,நண்பன் ......) என அவன் பொறுப்பேற்றிருக்கும் ஒவ்வொரு பாத்திரத்தின் சார்பாகவும் அவன் நம்பிக்கையாகவும்,உண்மையானவனாகவும்,நேர்மையானவனாகவும்,நடுநிலை தவறாதவனாகவும் இருக்க வேண்டும்..! அவன் இல்லாமல் போனாலும், அவனின் நினைவுகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு இனிமையான நினைவாக இருந்தது எனில் அது தான் அவன் இவ்வுலகத்தில் பெற்ற வெற்றி.
ஆனால் இந்த வெற்றி அவ்வளவு எளிதா என்றால் எளிதில்லை..! இதற்கு தான் மறுமை குறித்தான சிந்தனை தேவை படுகிறது..! அனைவரும் சொல்வது தான் நமது இறப்பு என்பது எப்போது வேணாலும் வரும்..!அதனால நாம தயார் நிலையில இருக்கணும் என்று..! ஆனால் உண்மையில் அது ஆழ்மனதில் திடத்தோடு பதிவு செய்ய பட்டிருந்தால் மட்டுமே சாத்தியம் ஆகும்..!
அந்த உணர்வு எப்போதும் நம் சிந்தனையில் ஓடி கொண்டிருந்தால்..! நாம் அடுத்தவர்களை பார்க்கும் பார்வை வேறாக இருக்கும்..! எழுதி கொண்டிருக்கும் நான் இந்த பதிவை பதிவு செய்வது உறுதியில்லை என்ற நிலைப் பாட்டையும் ,எப்போது வேண்டுமானாலும் இறைவன் என் உயிரை கைப்பற்றுவான் என்றும் அப்படி அவன் கைப்பற்றி அவன் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலை நான் வைத்திருக்கேனா என்று உறுதியாக நம்பும் போது தான் சக மனிதர்களை அவர்கள் செய்யும் தவறுகளை மன்னித்து அவர்களை நேசிக்க சொல்கிறது..! தன் தவறுகளையும் யார் சொன்னாலும் திருத்தி கொள்ள முடிகிறது..! உறவுகளையும் கொண்டாட சொல்கிறது.
விட்டு கொடுப்பவர் எப்போதும் கெட்டு போவதில்லை.
இப்போது உலகம் முழுவதும் வெவ்வேறு வடிவங்களில்,வெவ்வேறு பெயர்களில் வெளி வந்து கொண்டிருப்பது ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் தனி மனித உறவுகளை சீர்குலைக்கும் நிகழ்ச்சிகள்..! தனிப்பட்ட மனிதர்களின் கண்ணீர் ,துயரம்,ஆவேசம், என்று அவர்களின் அந்தரங்கத்தை கூறு போட்டு காசு பார்க்கும் சேனல்களின் கண்டுபிடிப்பு தான் இந்த ரியாலிட்டிஷோக்கள்..!
மாமியார் , மாமனார் , மருமகன் , மருமகள், அம்மா , பிள்ளை , பெண் ,நாத்தனார், மச்சினர், அண்ணன் மனைவி ,தம்பி மனைவி ,என ஒரு உறவு விடாமல் அனைவரையும் அழைத்து அவர்களை எதிர் எதிரே உட்கார வைத்து அவர்களின் குறைகளை கேட்கிறோம் என்ற பெயரில், தனிப்பட்ட உணர்வுகளை வெளிகொண்டு வருவதே இதன் அடிப்படை..!தன் சேனலின் டி.ஆர்.பி ( டெலிவிஷன் ரேட்டிங் பாயின்ட் ) என்னும் வழிமுறையை அதிகப் படுத்த எல்லாவித முறையையும் கையாள ஒவ்வொரு சானலும் தயாராக இருக்கிறது..! இவர்களுக்கு சமுதாயத்தின் மீது எந்த பொறுப்போ ,அக்கறையோ கிடையாது..! அவர்களின் நோக்கம் எல்லாம் வெறும் வர்த்தகம் மட்டுமே.
பொதுவாக குடும்பத்தில் ஒரு பிரச்சனை என்றால் இரு தரப்பினரும் மனம் விட்டு பேசினாலே பாதி பிரச்னை சரியாகி விடும்..! குடும்பத்தில் இருக்கும் வீட்டு பெரியவர்களும், சம்பந்தப்பட்டவர்களும்,உட்கார்ந்து பேசி ,எது சரி அல்லது எது தவறு என்று கலந்து ஆலோசிப்பது தான் சரியான வழி முறையாக இருக்கும்..! ஆனால் இதில் எந்த விதத்திலும் சம்பந்த படாத, அவர்களை பற்றி எதுவும் தெரியாத மூன்றாம் நபரின் தலையீடு ஒரு மணி நேரத்தில் குடும்ப விவகாரங்களை எப்படி தீர்க்க முடியும் என்பது தான் தெரிய வில்லை.
சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் ,உறவுகளின் பிரச்சனையை சரி செய்கிறோம் என்ற பெயரில் நடந்த ஒரு ரியாலிட்டி ஷோவை பார்க்க நேரிட்டது...! கணவர்கள் ஒரு புறம், மனைவிகள் மறுபுறம், நிகழ்ச்சியை நடத்துபவர் என்ற பெயரில் ஒருவர்..! அவர் சானலில் வாங்கும் லட்சக்கணக்கான சம்பளத்திற்கு , உண்மையாக உழைக்கும் விதத்தில் அவரின் கேள்விகள், இருதரப்பினரையும் தூண்டும் விதத்தில் இருந்தது...! அவர் அப்படி கேட்டால் தான் நிகழ்ச்சி சூடு பிடிக்கும்,வாக்கு வாதங்கள் அனல் தெறிக்க நடக்கும் என்பது அவருக்கு நன்கு தெரியும்.! அவர் எதிர் பார்ப்பதும் அது தான்.
எது அந்த பெண்ணை இப்படி தன் கணவரின் ஒரு அந்தரங்கமான விஷயத்தை லட்சக்கணக்கானவர்கள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் சொல்ல வைத்தது..? இதனால் அவர் அடைய போவதென்ன..? சொன்னதால் இவரின் பிரச்னை தீரப் போகிறதா..? வீட்டில் கணவனும் மனைவியுமாக உட்கார்ந்து பேசி தீர்க்க வேண்டிய ஒரு விஷயத்தை இப்படி பகீரங்கப் படுத்த வேண்டிய தேவை என்ன.? தன் முகம் தொலைக்காட்சியில் தெரிய வேண்டும் என்பதற்காக இந்த அளவு தன் தரத்தையும் ,தன் கணவனின் செயலையும் பறை சாற்ற வேண்டுமா ..? இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் இருவரும் சேர்ந்து தானே இருக்க வேண்டும்..? இந்த நிகழ்ச்சி அவர்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்காதா..? முன் போல அந்த கணவரால் அந்த பெண்ணுடன் இயல்பாக இருக்க முடியுமா ..? இது போன்ற பல கேள்விகள் மனதில் எழுவதை தவிர்க்க முடிய வில்லை.
கணவன் மனைவி உறவு என்பது எவ்வளவு அழகான ஆழமான உறவு..! மற்ற எல்லா உறவிலும் மாற்று எவருடனும் ஒப்பீடு செய்ய முடியும்..! ஆனால் இந்த உறவை எந்த உறவோடும் ஒப்பிட முடியாதே..! கருத்து வேறுபாடு இல்லாத கணவன் மனைவி யாரும் இங்கு உண்டா என்றால்,கண்டிப்பாக இருக்க முடியாது..! அப்படி இருப்பதற்கான சாத்தியமும் இல்லை என்பதே உண்மை...! இரு வேறு சூழ்நிலைகளில் வளர்ந்த ,வாழ்ந்த இரு உயிர்கள் ஓருயிராக வாழ ஆரம்பிக்கும் போது தொடக்கத்தில் பிரச்சனைகள் ஏற்படுவது என்பது மிக இயல்பான ஒன்று..! ஆனால் அதை எல்லாம் தாண்டி சரியான பரிதலும்,ஒருவரின் பால் ஒருவருக்கு இயல்பாகவே ஏற்படும் ஈர்ப்பும் ,நேசமும் இருந்து விட்டால் பிறகு எந்த வித பிரச்சனையும் அவர்களை ஒன்றும் செய்யாது.
அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள் (அல் - குரான்2:187)
இந்த ஒரு ஆழமான வசனத்தின் மூலமாகவே கணவன் மனைவி உறவு என்பது எப்படி பட்டது..! அது எப்படி இருக்க வேண்டும் என்பது நமக்கு உணர்த்தப் பட்டு இருக்கிறது..! ஆடை எப்படி நம் மானத்தை காக்கிறதோ அப்படி தான் கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் தன் துணையின் குறையை, அந்தரங்கத்தை , ரகசியத்தை,காக்க வேண்டியது கடமை ஆகும்...! நமக்கு இயற்கையாக ஏற்படும் சில தேவைகளை,
தேடல்களை ஹலாலான வழியில் பெற வேண்டும் என்றால் கணவன் மனைவி என்ற பந்ததால் மட்டுமே சாத்தியம்...! அது தான் இறை வகுத்த சட்டமும்.
இங்கு முழுதாக, ஆணை அறிந்த பெண்ணும் இல்லை..! பெண்ணை, அறிந்த ஆணும் இல்லை என்பதே உண்மை..! அறிந்து கொள்வதும் அவ்வளவு எளிது இல்லை..! தேவையும் இல்லை..! இறையின் படைப்பு அப்படி தான் படைக்க பட்டிருக்கிறது..! ஆணின் இயல்பு தன்மை வேறு..! பெண்ணின் இயல்பு தன்மை என்பது வேறு..! இதை அவரவர் இயல்பு படி சரியாக புரிந்து கொண்ட ஆணும் பெண்ணும் தான் வெற்றியாளர்கள்...! இந்த சரியான புரிதல் என்பது ஒருவர் அடுத்தவர் மீதான நேசத்தையும்,மதிப்பையும், மரியாதையும் கொடுக்கிறது...! குறைகளை மன்னிக்க சொல்கிறது..!.இந்த ஒற்றுமையின் காரணமாக நல்ல அறிவான,பண்பான சந்ததிகளை கொடுக்க முடிகிறது.
இந்த மாதிரி ஷோக்களை பார்க்கும் போது..! பொதுவில் உணர்ச்சிவசப்பட்டு அவர்கள் வெளியிடும் வார்த்தைகளில் பொருட்டு விளையும் பின் விளைவுகளை நினைக்கும் போது அவர்களின் மீது பரிதாபமே வருகிறது. ஏற்கனவே உறவுகள் சிக்கலாகி கொண்டிருக்கும் காலம் இது...! உறவுகளின் எண்ணிக்கையும் சுருங்கி கொண்டு வருகிறது...! இதில் இருக்கும் உறவுகளையும்இல்லாமல் பண்ணுவதற்கு தேவையான எண்ணெயை ஊற்றி கண்ணுக்கு தெரியாமல் அதை பற்ற வைக்கும் வேலையை தான் சானல்கள் செய்து கொண்டு இருக்கின்றன.
ஒரு மனிதன் என்பதற்கு உரிய சரியான அர்த்தத்தோடு ஒருவன் வாழ வேண்டும் என்றால் அவன் அங்கம் வகிக்கும் பாத்திரம் ( மகன்,சகோதரன்,கணவன்,மாமா,மச்சான்,நண்பன் ......) என அவன் பொறுப்பேற்றிருக்கும் ஒவ்வொரு பாத்திரத்தின் சார்பாகவும் அவன் நம்பிக்கையாகவும்,உண்மையானவனாகவும்,நேர்மையானவனாகவும்,நடுநிலை தவறாதவனாகவும் இருக்க வேண்டும்..! அவன் இல்லாமல் போனாலும், அவனின் நினைவுகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு இனிமையான நினைவாக இருந்தது எனில் அது தான் அவன் இவ்வுலகத்தில் பெற்ற வெற்றி.
ஆனால் இந்த வெற்றி அவ்வளவு எளிதா என்றால் எளிதில்லை..! இதற்கு தான் மறுமை குறித்தான சிந்தனை தேவை படுகிறது..! அனைவரும் சொல்வது தான் நமது இறப்பு என்பது எப்போது வேணாலும் வரும்..!அதனால நாம தயார் நிலையில இருக்கணும் என்று..! ஆனால் உண்மையில் அது ஆழ்மனதில் திடத்தோடு பதிவு செய்ய பட்டிருந்தால் மட்டுமே சாத்தியம் ஆகும்..!
அந்த உணர்வு எப்போதும் நம் சிந்தனையில் ஓடி கொண்டிருந்தால்..! நாம் அடுத்தவர்களை பார்க்கும் பார்வை வேறாக இருக்கும்..! எழுதி கொண்டிருக்கும் நான் இந்த பதிவை பதிவு செய்வது உறுதியில்லை என்ற நிலைப் பாட்டையும் ,எப்போது வேண்டுமானாலும் இறைவன் என் உயிரை கைப்பற்றுவான் என்றும் அப்படி அவன் கைப்பற்றி அவன் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலை நான் வைத்திருக்கேனா என்று உறுதியாக நம்பும் போது தான் சக மனிதர்களை அவர்கள் செய்யும் தவறுகளை மன்னித்து அவர்களை நேசிக்க சொல்கிறது..! தன் தவறுகளையும் யார் சொன்னாலும் திருத்தி கொள்ள முடிகிறது..! உறவுகளையும் கொண்டாட சொல்கிறது.
விட்டு கொடுப்பவர் எப்போதும் கெட்டு போவதில்லை.
சகோதரி.
ஆயிஷா பேகம்.
Tweet | ||||||
வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
ReplyDeleteசுப்ஹானல்லாஹ்...what a hard hitting article.
மிக மிக அருமையான ஆக்கம் சகோதரி. உங்களை நினைத்து ரொம்பவே பெருமையாக இருக்கின்றது.
இதே பார்ம்ல புகுந்து விளையாடுங்க. உங்க கல்வி அறிவை அதிகப்படுத்த இறைவன் போதுமானவன்..
வஸ்ஸலாம்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
Deleteஅல்ஹம்துலில்லாஹ்..
தங்கள் வருகைக்கும்,பாராட்டுக்கும்,ஊக்கத்திற்கும் மிக்க நன்றி சகோ..
இன்ஷா அல்லாஹ் துஆ செய்யுங்கள் சகோ
அஸ்ஸலாம்..
ReplyDeletereality shows எல்லாம் பாகும் போது நல்லாத்தான் தெரியுது..
அதுக்கு பின்னடி இப்படி ஒரு விசயம் இருக்குனு யோசிக்க தவரியாச்சு..
சரியான நேரத்துல.. சரியான விழிப்புனர்வு செய்தி..
மிக அருமை சகோதரி..
வாழ்த்துக்கள் :)
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
Deleteதங்கள் வருகைக்கும்,பாராட்டுக்கும் மிக்க நன்றி சகோ..
சகோதரி ஆயிஷாவிற்கு....அஸ்ஸலாமு அழைக்கும். அருமையான கட்டுரை. நம் சமூகத்தில் இப்படியும் பதிவர்கள் இருக்கிறார்களா....மாஷா அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் அதிகமான நலனை நோய்நொடியில்லாமல் தர அல்லாவிடம் பிரார்த்திக்கிறேன். அத்துடன் என் ப்லாக்க்கிலும் உங்கள் அனுமதியின்றி பதிவு செய்திருக்கிறேன். மன்னிக்கவும். உங்கள் அனுமதியோடுதான் போட விருப்பம். ஆனால் ஒருசில நல்ல விசயங்களை தள்ளிப்போடக்கூடாது என்பதால் பதிவு செய்தவுடன் உங்கள் அனுமதி வேண்டுகிறேன். - azifair-sirkali.blogspot.com
ReplyDelete&
வ அழைக்கும் சலாம் வரஹ்..
Deleteஅல்ஹம்துலில்லாஹ்..
//என் ப்லாக்க்கிலும் உங்கள் அனுமதியின்றி பதிவு செய்திருக்கிறேன்.// மிகவும் சந்தோசம் சகோ..:)
தங்கள் வருகைக்கும்,பாராட்டுக்கும்,கனிவான துஆவுக்கும் மிக்க நன்றி சகோ
சலாம் சகோ ஆயிஷா,
ReplyDelete/* எது அந்த பெண்ணை இப்படி தன் கணவரின் ஒரு அந்தரங்கமான விஷயத்தை லட்சக்கணக்கானவர்கள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் சொல்ல வைத்தது..? இதனால் அவர் அடைய போவதென்ன..? சொன்னதால் இவரின் பிரச்னை தீரப் போகிறதா..? */
ரொம்ப நியாயமான கேள்வி. இது போன்ற ஷோக்களின் போது பேசும் பேச்சை வீட்டில் பேசினாலே எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடும்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
Deleteஉண்மை தான் சகோ..
தங்கள் வருகைக்கும்,அர்த்தமுள்ள கருத்துக்கும் மிக்க நன்றி சகோ..
/* அந்தக் குறையும் நம் வாழ்க்கைக்கோ ,மார்க்கத்திற்கோ,பங்கம் விளைவிக்கக் கூடிய வகையில் இல்லை என்றால் அதை அப்படியே மாற்ற முயலாமல் ஏற்றுக் கொள்வதே சரி. */
ReplyDeleteஎவ்வளவு உண்மையான வரிகள். superb போஸ்ட். அடிக்கடி எழுதுங்க.
இன்ஷா அல்லாஹ்..பாராட்டுக்கு நன்றி சகோ
Deleteசலாம் சகோ.ஆயிஷா,
ReplyDeleteஅருமையான விழிப்புணர்வூட்டும் பதிவு. ஓங்கி 'நறுக்' என்று குட்டு போடுவது போல... நல்லா எழுதி இருக்கீங்க சகோ..!
இப்படி ஒரு நிகழ்ச்சி நடப்பது நீங்கள் சொல்லித்தான் தெரியும். பொதுவாக... ஒருத்தரை ஒருத்தர் கோள்சொல்லி புறம்பேசி போட்டுக்கொடுக்கும் நிகழ்ச்சி இப்போது தொலைகாட்சியில் ஒளி/ஒலிபரப்பு ஆகிறதா..? ம்ம்ம்... 'நல்ல முற்போக்கு'(?) சமுதாயமாகத்தான் மாறிக்கொண்டு இருக்கிறோம்..!
இப்படியான அடுத்தவர் பற்றியான பேச்சை காது கொடுத்து... "ம்ம்ம். சொல்லு... அப்புறம்..." என்று கேட்கவே ஒரு குழாயடி... ஆலமரத்தடி... திண்ணை.... என்று ஒரு கூட்டம் கிராமங்களில் அலையும்..! இப்போது அந்த கும்பல் ஸ்டுடியோவில் உட்கார்ந்து இருக்கிறது. டீவி முன்னாலும்..! அப்போது.., இலவசம்..! இப்போது காசு..!
சொன்னால் நம்பமாட்டீர்கள் சகோ....
நானும் என் மனைவியும்... சண், கேடிவி, ஜெயா, விஜய், ராஜ், மக்கள்.... போன்ற தொலைகாட்சி சேனல்களை பார்த்து ஒரு வருஷத்துக்கு மேலே ஆகுது..! இதனால் நாங்க ரர்ர்ர்ரர்ர்ர்ர்ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப சந்தோஷமா இருக்கோம்..! நீங்களும் இப்படி ட்ரை பண்ணுங்களேன் சகோ.ஆயிஷா..?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
Delete//இப்படி ஒரு நிகழ்ச்சி நடப்பது நீங்கள் சொல்லித்தான் தெரியும்//அப்ப நீங்க அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் நிறைய இருக்கு சகோ.:-))
நான் இங்கு ஒரு விஷயத்தை பற்றி மட்டும் தான் பதிவு செய்து இருக்கிறேன் ஆனால் சிறுபிள்ளைகளை வைத்து நடத்தும் ஷோக்கள் இப்போது இங்கு பிரபலம்.. இறைநாடினால் அது குறித்தும் பதிவு செய்ய வேண்டும் சகோ..
//நானும் என் மனைவியும்... சண், கேடிவி, ஜெயா, விஜய், ராஜ், மக்கள்.... போன்ற தொலைகாட்சி சேனல்களை பார்த்து ஒரு வருஷத்துக்கு மேலே ஆகுது// உண்மையில் மிக நல்ல விஷயம் சகோ இங்கு வந்தாலும் இதை அப்படியே தொடருங்கள் உறவுகளுடன் பேச நேரம் கிடைக்கும்..
//நீங்களும் இப்படி ட்ரை பண்ணுங்களேன் சகோ.ஆயிஷா..?// எனக்கும் தொலை காட்சியில் நேரத்தை தொலைப்பதில் உடன்பாடு இல்லை சகோ..:)
எனக்கு விருப்பமானவை வேறு..
தங்கள் வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ..
/* நானும் என் மனைவியும்... சண், கேடிவி, ஜெயா, விஜய், ராஜ், மக்கள்.... போன்ற தொலைகாட்சி சேனல்களை பார்த்து ஒரு வருஷத்துக்கு மேலே ஆகுது..! இதனால் நாங்க ரர்ர்ர்ரர்ர்ர்ர்ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப சந்தோஷமா இருக்கோம்..! */
ReplyDeleteநீங்கள் தொடர்ந்து அவ்வாறே இருக்க இறைவன் அருள் புரிவானாக. ஆமீன். ஆனா தமிழகத்தில் இருப்பவர்களில் தொலைக்காட்சியில் நாடகம் பார்க்காமல் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை சொற்பமாகவே இருக்கும். NIL லா கூட இருக்கலாம்.ஹி..ஹி..ஹி... இதில என்ன கொடுமைனா, 3 கதை இருக்கு அத வச்சு தான் எல்லா நாடகமும் ஓடிகிட்டு இருக்கு. 1 . மாமியா கெட்டவங்களா இருந்து மருமகள கொடும படுத்துவாங்க 2 . இல்லாட்டி மருமக கெட்டவங்களா இருந்து மாமியார கொடும படுத்துவாங்க 3 .யாராவது கெட்டவங்களா இருந்து யாரையாவது கொடும படுத்துவாங்க.
இதில அன்னம் தண்ணி இல்லாம கஷ்டப் படறது நாங்க தான். அங்க(டிவில) யாராவது கொஞ்ச நேரம் அழுகைய நிறுத்துனா தான் நமக்கு இங்க(வீட்ல) சோறு கிடைக்குது. பார்ப்போம் இந்த பதிவாவாது ஏதாவது மாற்றாத கொண்டு வருதான்னு. ஏன்பா பசங்கள?? பொண்டாட்டிகள இந்த பதிவ படிக்க சொல்லுங்கப்பா.....இல்லாட்டி பட்னி கெடந்து சாவுங்கப்பா......
//ஆனா தமிழகத்தில் இருப்பவர்களில் தொலைக்காட்சியில் நாடகம் பார்க்காமல் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை சொற்பமாகவே இருக்கும்// அந்த சொற்பத்தில் என்னையும் சேர்த்து கொள்ளுங்கள் சகோ..:-))
Deleteசகோ நீங்க தமிழ்மணத்தில் இல்லையோ????
ReplyDeleteஇல்லை சகோ
Deleteஅம்மா ஆயிஷா பேகம்
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,,
ஆழமான கருத்துடன் விழிப்பூட்டும் சிறந்த பதிவு.
தாயே, வளர்ந்து தொடரட்டும் தங்கள் நற்பணி.
வாஞ்சையுடன் வாஜ்ஜூர்.
வ அழைக்கும் சலாம் வரஹ்..
Deleteஉங்களின் தாயே என்ற வார்த்தைகள் எனக்கு பிடித்த இருவரின் (அய்யா, காய்கார பாட்டி)அழகான நினைவுகளை வரவழைத்து விட்டது..:-))
தங்களின் வருகைக்கும் ,வாஞ்சையான,பாராட்டுக்கும் மிக்க நன்றி அப்பா.
தங்களின் துஆக்கள் எப்போதும் எங்களுக்கு வேண்டும்.
ரொம்ப நாளாக எழுத நினைத்து டிராப்டில் கிடக்கும் சப்ஜெக்ட். ஆனால் அது பொதுவான ரியாலிட்டி ஷோவை பற்றியது. இதில் இன்னும் பல உண்மைகள் இருக்கின்றன.
ReplyDeleteஇதற்கான தீர்வு, மக்களிடம் இது போன்ற டிவி சேனல்களையும், நிகழ்ச்சிகளையும் புறக்கணிக்க சொல்வதே. புறக்கணித்தால் டி.ஆர்.பி ரேட்டிங் குறைஞ்சு நல்ல நிகழ்ச்சிகளாக தொகுத்து வழங்க முயற்சி செய்வார்கள். நம் வீட்டிலிருந்து ஆரம்பிப்போமே. அப்புறம் சகோ ஆஷிக் சொன்னது போல் ஒட்டு மொத்தமாக புறக்கணித்தால் இன்னும் நலம்.
அருமையான ஆக்கம் சகோ. அதிலும் சாட்டையடி கேள்விகள், நறுக்கென்று குட்டு வைத்தது போன்ற அறிவுரைகள். விழிக்குமா சமூகம்.
சிராஜ் பாய், ரொம்ப கஷ்டப்படுறீங்க போல. உங்கள மாதிரி ஆளுங்க கஷ்டப்படுறத பத்தி வேணா ஒரு சீரியல் எடுக்க சொல்வோமா?? :)
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
Deleteநல்ல கருத்துக்கள் சகோ.இன்ஷா அல்லாஹ் முயற்சி செய்வோம்.
//சிராஜ் பாய், ரொம்ப கஷ்டப்படுறீங்க போல. உங்கள மாதிரி ஆளுங்க கஷ்டப்படுறத பத்தி வேணா ஒரு சீரியல் எடுக்க சொல்வோமா??// :) :-))
தங்களின் வருகைக்கும்,பாராட்டுக்கும் மிக்க நன்றி சகோ..
ஆயிஷா, அஸ்ஸலாமு அலைக்கும். ரொம்ப நல்ல பதிவுங்க.
ReplyDeleteஎன் கணவர், என்னை என் பெற்றோர் முன்னே சிறிதாகக் குறை சொன்னாலே கோபப்படுவேன். இவர்களால் எப்படி உலகத்தின்முன்னே இப்படி பேசிக்கொள்ள முடிகிறதோ?
இஸ்லாமில், ’உங்கள் அந்தரங்கங்களைப் பிறரிடம் பேசாதீர்கள்’ என்ற அறிவுரை உண்டு. முன்பு இதை நான் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. இல்லற பந்தத்தில் சில (அடிதடி.. ஹி..ஹி..) அனுபவங்களைப் பெற்றபின்புதான் புரிந்தது.
//ஆனா தமிழகத்தில் இருப்பவர்களில் தொலைக்காட்சியில் நாடகம் பார்க்காமல் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை சொற்பமாகவே இருக்கும்.//
@சிராஜ் பாய், உங்கள் வீட்டுப் பெண்களையும் இதில் சேர்க்க முடியும். வீட்டில் உள்ள பெண்களுக்கு இதுபோன்ற பல பதிவுகளைப் பிரிண்ட் எடுத்துக் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள். உணருவார்கள். நீங்களும் எடுத்துச்சொல்லுங்க. அதற்குமுன், டிவி பார்ப்பதை முதலில் நீங்கள் முழுமையாக நிறுத்த வேண்டும். மனமிருந்தால் மார்க்கமுண்டு, இறைவன் துணையுடன்.
வ அழைக்கும் சலாம் வரஹ்..
Deleteம்ம்..உண்மை தான் சகோ .சிலரின் பேச்சை நேரில் கேட்கும் போதும் இதே போல் தான் தோணுது..
அனுபவமே சிறந்த ஆசான் அது எந்த ரூபத்தில் கிடைத்தாலும் சரியே:):):)
தங்களின் வருகைக்கும், பாராட்டுக்கும்,நல்ல கருத்துக்கும் மிக்க நன்றி சகோ
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteமாஷா அல்லாஹ்
சிறப்பான பதிவு
வ அழைக்கும் சலாம் வரஹ்..
Deleteதங்களின் வருகைக்கும்,பாராட்டுக்கும் மிக்க நன்றி..:-))
ஆயிஷா அசரடித்த பதிவு.வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
Deleteதங்களின் வருகைக்கும்,பாராட்டுக்கும் மிக்க நன்றி..:-))
.சிலரின் பேச்சை நேரில் கேட்கும் போதும் இதே போல் தான் தோணுது..
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி..:-)
Delete//அந்த உணர்வு எப்போதும் நம் சிந்தனையில் ஓடி கொண்டிருந்தால்..! நாம் அடுத்தவர்களை பார்க்கும் பார்வை வேறாக இருக்கும்..! எழுதி கொண்டிருக்கும் நான் இந்த பதிவை பதிவு செய்வது உறுதியில்லை என்ற நிலைப் பாட்டையும் ,எப்போது வேண்டுமானாலும் இறைவன் என் உயிரை கைப்பற்றுவான் என்றும் அப்படி அவன் கைப்பற்றி அவன் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலை நான் வைத்திருக்கேனா என்று உறுதியாக நம்பும் போது தான் சக மனிதர்களை அவர்கள் செய்யும் தவறுகளை மன்னித்து அவர்களை நேசிக்க சொல்கிறது..!//
ReplyDeleteமிக அருமையாக, வாழ்க்கையை வாழும் விதத்தை விளக்கியுள்ளீர்கள், சாகோதரி!, இதே சிந்தனைத் தெளிவு அனவரிடமும் இருந்துவிட்டால் வாழ்வு எவ்வளவு இனிமையானதாக இருக்கும்.
இறைவன் உங்களின் கல்வி ஞானத்தை இன்னும் விசாலப்படுத்துவானாக...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
Deleteதங்களின் வருகைக்கும்,ஆரோக்கியமான கருத்துக்கும் ,கனிவான துஆக்கும் மிக்க நன்றி சகோ..
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ///ஆயிஷா.
ReplyDeleteநல்ல பதிவு.தங்கள் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஆணிஅடித்தாற்போல் உள்ளது.
பயனுள்ள பகிர்வுக்கு பாராட்டுக்கள் பல.
வாழ்த்துக்களும்....
அன்புடன்,
அப்சரா.
வ அழைக்கும் சலாம் வரஹ்..
Deleteதங்களில் வருகைக்கும் தங்களின் உற்சாகமூட்டும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ..:-))
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காதஹூ சகோ.... :)
ReplyDeleteஉங்கள் உணர்வுகளை மிக அழகாக பதிந்து இருக்கிறீர்கள் சகோ.
இதே பதிவை நான் எழுதி இருந்தா அந்த நிகழ்ச்சியை திட்டி தீர்த்திருப்பேன்.
ஆனா நீங்க ரொம்ப பொறுமையா சரியா கையாண்டு இருக்கீங்க.
மாஷா அல்லாஹ்.
எழுதி கொண்டிருக்கும் நான் இந்த பதிவை பதிவு செய்வது உறுதியில்லை என்ற நிலைப் பாட்டையும் ,எப்போது வேண்டுமானாலும் இறைவன் என் உயிரை கைப்பற்றுவான் என்றும் அப்படி அவன் கைப்பற்றி அவன் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலை நான் வைத்திருக்கேனா என்று உறுதியாக நம்பும் போது தான் சக மனிதர்களை அவர்கள் செய்யும் தவறுகளை மன்னித்து அவர்களை நேசிக்க சொல்கிறது..! தன் தவறுகளையும் யார் சொன்னாலும் திருத்தி கொள்ள முடிகிறது..! உறவுகளையும் கொண்டாட சொல்கிறது.///
அழகிய சிந்தனை. ஜஸக்கல்லாஹ் ஹைர் சகோ
வ அழைக்கும் சலாம் வரஹ்..
ReplyDeleteதங்கள் வருகைக்கும்,பாராட்டுக்கும்,ஊக்கத்திற்கும் மிக்க நன்றி சகோ..:)