Friday 3 February 2012

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள்..!


ஏக இறைவனின் கருணையோடு..! 

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

நம் மனதைத்  தூய்மையாக வைத்துக் கொள்ளவும் ,மன நிம்மதி பெறவும் ஆக்கப் பூர்வமான ,சிறந்த வழி !நாம் எப்போதும் இறைவனை துதி செய்து கொண்டு இருப்பதே ! முழு உணர்வுடனும் ,முழு இறை நம்பிக்கையுடனும் இறைவனின் பண்புகளையும் அவனின் தேட்டங்களையும் கவனிக்க வேண்டும்.

திருமறை கூறுகிறது ;

மேலும் காலையிலும் மாலையிலும் அவனைத் துதித்துக் கொண்டிருங்கள் அவனே உங்கள் மீது கருணை  பொழிகிறான் . (23 :42)

'அல்லாஹ் அழகிய பெயர்களுக்கு உரித்தானவன் ;எனவே ,அந்த அழகிய பெயர்களைக் கொண்டே அவனை அழையுங்கள் !மேலும் அவனுக்குப் பெயர்கள் வைப்பதில் வழி பிறழ்ந்து செல்பவர்களை விட்டு விடுங்கள் !அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றின் கூலியை அவர்கள் பெற்றே தீருவார்கள் !(7 ;180 )

அந்த அழகிய திருநாமங்களும் அதற்குரிய தேட்டங்களும் திருமறையில் பல்வேறு இடங்களில் சொல்லப் பட்டுள்ளது .நபி (ஸல் )அவர்களும் அந்த திருநாமங்களின் எண்ணிக்கை,அதன் வளங்கள் அவற்றைப் பாதுகாப்பாக வைப்பதால் கிடைக்கும் மாபெரும் வெகுமதி ஆகியவற்றைப் பற்றி எடுத்துரைத்துள்ளார்கள் !அதனை ஓதியவண்ணம் இருக்கும்படி ஆர்வமூட்டியும் உள்ளார்கள் !

அண்ணல் நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் அல்லாஹ்வுக்கு தொன்னூற்று ஒன்பது திருப் பெயர்கள் உள்ளன .எவர் அவற்றை  மனனம் செய்து கொள்வாரோ அவர் சுவர்க்கத்தில் பிரவேசிப்பார் !' (புகாரி )

இறைவனின் திருப் பண்புகளை விவரிக்கும் பெயர்களை மனனம் செய்து கொள்வது என்பது விசாலமான பொருள் கொண்டதாகும்.முதலில் அந்த திருப்பெயர்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.அவற்றில் சொல்லப் பட்டுள்ள இறைத்தன்மைகளை ஒப்புக் கொண்டு பின் அதன் தேட்டங்களின் படி நடக்க வேண்டும்.

அவற்றின் அடிப்படையில் இறையச்சத்துடன் நமது வாழ்வை வகுக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் அதற்கு சரியான வழிமுறை தினமும் முழு ஆர்வத்துடன் திருக் குர்ஆன் ஓத வேண்டும்.தினமும் நாம் ஓதும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும் .அதன் வசனங்களை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

அடுத்து ஆதாரப் பூர்வமான நபிமொழிகளை மிக கவனத்துடனும் அக்கறையுடனும் படிக்க வேண்டும் நபி மொழிகளில் பல பிராத்தனைகள் வந்துள்ளன.அவற்றில் பொதுவாகவே ,இறைநாமங்கள் இடம் பெற்றுள்ளன .அத்தகைய பிராத்தனைகளை ஒர்மனப்பட்டு ,உளப்பூர்வமாக பிராத்திக்க வேண்டும்.

திருக்குரானை ஆழ்ந்து ஆராய்ந்த பேரறிஞர்கள் ,அல்லாஹ்வின் 99 திருநாமங்களை திருக்குரானில் இருந்து திரட்டி தந்துள்ளார்கள் அவை
1)அல்லாஹ்
2)அர் ரஹ்மான்
3)அர் ரஹீம்
4)அல் மலிகு 
5)அல் குத்தூஸ்
6)அஸ்ஸலாம்
7)அல் முஃமின் 
8)அல் முஹைமின்
9)அல் அஜீஸ்
10)அல் ஜப்பார் 
11)அல் முதகப்பிர் 
12)அல் காலிக் 
13)அல் பாஃரி 
14)அல் முஸவ்விர்
15)அல் கஃப்ஃபார்
16)அல் கஹ்ஹார் 
17)அல் வாஹித் 
18)அல் தவ்வாப் 
19)அல் வஹ்ஹாப் 
20)அல் கல்லாக் 
21)அர் ரஸ்ஸாக்
22)அல் மதீன்
23)அல்ஃ பத்தாஹ் 
24)அல் அலீம் 
25)அல் முஹீத் 
26)அல் கதீர் 
27)அல் ஹலீம் 
28)அல் கஃபூர் 
29)அல் அஃபூவ்
30)அஷ்ஷகூர் 
31)அல் அஜீம் 
32)அல் வஸி
33)அல் ஹகீம் 
34)அல் ஹய்யு 
35)அல் கய்யூம் 
36)அஸ் ஸமீ
37)அல் பஸீர்
38)அல் லத்தீஃப்
39)அல் க(ஹ்)பீர் 
40)அல் அலீ
41)அல் கபீர் 
42)அல் ஹக் 
43)அல் முபீன் 
44)அல்மவ்லா
45)அல் நஸீர்
46)அல் கரீம்  
47)அல் கனீ
48)அல் ஹமீத் 
49)அல் கவிய்யு
50)அஷ் ஷதீத்
51)அர் ரகீப் 
52)அல்கரீப் 
53)அல் முஜீப்
54)அல் வகீல்
55)அல் ஹஸீப்
56)அல் ஜாமி
57)அல் காதிர் 
58)அல் ஹஃபீஸ் 
59)அல் முகீத் 
60)அல் வதூத்
61)அல் மஜீத் 
62)அஷ் ஷஹீத் 
63)அல் வாரிஸ் 
64)அல் முஹ்பீ ஈ 
65)அல் வலீ
66)அல் ஃ பாதிர் 
67)அல் மாலிக் 
68)அல் முக்ததிர் 
69)அல் மலீக் 
70)அல் அவ்வல்
71)அல் ஆகிர் 
72)அள் ளாஹிர 
73)அல் பாதின் 
74)அல் காஹிர்
75)அல் காஃபீ
76)அஷ் ஷாகிர் 
77)அல் முஸ்தஆன்
78)அல் பதீ
79)அல் ங்காஃபிர்
80)அல் ஹாகீம் 
81)அல் காலிப் 
82)அல் ஹகம் 
83)அல் ஆலிம் 
84)அல் முத் 'ஆல் 
85)அல் ரஃபீ
86)அல் ஹாபிஸ் 
87)அல் முன்தகிம்
88)அல் கா இம்
89)அல் இலாஹ் 
90)அல் ஹாதி 
91)அல் ரவூஃப் 
92)அந் நூர்
93)அல் அக்ரம்
94)அல் அஃலா
95)அல் பர்
96)அர் ரப்
97)அல் ஹஃபிய்யு
98)அல் அஹத் 
99)அஸ்ஸமத்
திருநாமங்களின் அர்த்தங்களை அவன் நாடினால் தொடந்து பார்ப்போம்.

சகோதரி.
ஆயிஷா பேகம்.


   

2 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்,

    ஜசாக்கல்லாஹ் சிஸ்டர்

    ReplyDelete
  2. வ அழைக்கும் சலாம் வரஹ்.

    ஃபதபாரகல்லாஹ் பிரதர்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...