Saturday, 4 February 2012

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள்..!

ஏக இறைவனின் கருணையோடு..! 

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..
1)அல்லாஹ்:
அகிலங்கள் அனைத்தையும் படைத்தவனின் பெயராகும். உயர்பண்புகள், நன்மைகள், பாக்கியங்களின் ஊற்றாய் இந்த பெயர் நிற்கின்றது. இந்தப் பெயர், அவனைத் தவிர வேறு யாரையும் எப்போதும் குறிப்பிடுவதில்லை; குறிப்பிடுவதும் சரியானதல்ல! எப்போதும் அல்லாஹ்தான் உங்களின் அன்புக்கு மையமாக இருக்க வேண்டும். மேலும், வழிபாடுகளுக்கும் தியாகங்களுக்கும் தனித்தே உரித்தானவன் அவன் ஒருவனே! மேலும், ஆபத்துகள் அனைத்திலிருந்தும் பாதுகாப்பு தரக்கூடிய புகலிடம் ஆவான்!

எனவே, அவனுடைய நேசத்தையே உங்களின் இதயத்தில் நிலை நிறுத்திக் கொள்ளுங்கள்! அவனுக்கே வாய்மையுடன் வழிபடுங்கள்! எப்போதும் அவன் மீதே சார்ந்து நில்லுங்கள். 

"மனிதர்களில் சிலர், அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களையும்(அவனுக்கு) நிகரானவர்களாய் ஆக்கிக் கொள்கின்றார்கள். மேலும், அல்லாஹ்வை எவ்வாறு நேசிக்க வேண்டுமோ, அதுபோலவே, அவர்களையும் நேசிக்கின்றார்கள். ஆனால், இறைநம்பிக்கை கொண்டவர்களோ, அல்லாஹ்வை அனைவரையும் விட அதிகமாக நேசிக்கின்றார்கள்."(2:165)

"(நபியே!) நாம் இந்த வேதத்தை உம் மீது சத்தியத்துடன் இறக்கி இருக்கின்றோம். எனவே, நீர் அல்லாஹ்வையே வழிபடும். தீனை-கீழ்ப்படிதலை அவனுக்கே உரித்தாக்கிய நிலையில்! அறிந்து கொள்ளுங்கள். தூய்மையான கீழ்படிதல் முற்றிலும் அல்லாஹ்வுக்கே உரித்தானதாகும்".(39:2,3)

"(நபியே!) தெளிவாக கூறிவிடும்: அல்லாஹ்வுக்கு அடிபணிய வேண்டுமென்றும், அவனுக்கு யாரையும் இணைவைக்கக் கூடாதென்றும் நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் "(13:26)

"மேலும், நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே முழுமையாய்ச் சார்ந்திருக்க வேண்டும்."(9:51)


2 )அர் ரஹ்மான்: 
அளவற்ற அருளாளன் ,நிகரற்ற இரக்கம் கொண்டவன் ,மனிதனுக்குத் தன்னுடைய பேரருட்கொடைகளை வாரி வழங்கி வருபவன் .

''அளவிலாக் கருணையுள்ள(இறை)வன்,இந்தக் குர் ஆனைக் கற்றுத் தந்தான் .அவனே மனிதனைப் படைத்தான் ;அவனுக்குப் பேசக் கற்றுக் கொடுத்தான்
(55:1,55:2,55:3,55:4)

இறைவன் மனிதனுக்கு வழங்கிய அருட்கொடைகளில் முக்கியமானது திருக்குர் ஆன் எனும் மாபெரும் அருட்கொடையே !அது மட்டுமின்றி மனிதனுக்குப் பிற படைப்புக்களை விட சிறப்பாக பேசும் ஆற்றலையும் இறைவன் வழங்கியுள்ளான் .


3)அர் ரஹீம்.
அந்த இறைவனின் நேசமும்,அன்பும் படைப்பினங்கள் அனைத்தையும் சூழ்ந்து கொண்டிருகிறது .அது நிரந்தரமானது :முடிவற்றது! உலகில் அவனுடைய கருணை தொடர்ந்து பொழிந்து கொண்டிருகிறது .அவற்றின் துணை கொண்ட மனிதன் வளர்கிறான் :உயர்வு அடைகிறான்:நன்மையின் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறான்.மேலும்,மறுமையிலும் இறைநம்பிக்கையாளர்கள் அவனுடைய இந்த பண்பின் காரணமாகவே சுவனத்தில் சுகமாகவும் பல கொடைகளுக்கு மத்தியிலும் திளைத்திருப்பார்கள்.

''அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் எண்ணிட முயன்றால் ,அவற்றை உங்களால் எண்ணவே முடியாது,திண்ணமாக ,அல்லா பெரிதும் மன்னிப்பவனாகவும் ,கருணை புரிபவனாகவும் இருக்கிறான் .''(16:18)

மேலும் ,அல்லாஹ் கூறுகிறான் :

"அவனுடைய வானவர்களும் உங்கள் மீது கருணை புரியும்படி இறைஞ்சுகிறார்கள் ;அவன் உங்களை இருள்களிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் கொண்டு வருவதற்காக !அவன் நம்பிக்கையாளர்கள் மீது பெருங் கருணை பொழிபவனாக இருக்கிறான் .அவர்கள்,அவனைச் சந்திக்கும் நாளில்,ஸலாம்-சாந்தி உண்டாகட்டும் என்று வாழ்த்துக் கூறி வரவேற்கப் படுவார்கள் .மேலும்,அல்லாஹ் அவர்களுக்காக கண்ணியமான கூலியைத் தயார் செய்து வைத்துள்ளான்.(33:43:44)  

திருநாமங்களின் அர்த்தங்களை அவன் நாடினால் தொடந்து பார்ப்போம்.
சகோதரி.
ஆயிஷா பேகம்.


4 comments:

 1. தொடர்ந்து எழுதுங்கள்.நல்ல பகிர்வு.

  ReplyDelete
 2. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.

  தங்கள் வருகைக்கும்,ஊக்கத்திற்கும் மிக்க நன்றி சகோதரி.

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும்

  ஆயிஷா பேஅம்
  அருமையான தொகுப்பை தொகுத்து வரீங்க தொடருஙக்ள்

  இப்படிக்கு
  ஜலீலா

  ReplyDelete
  Replies
  1. வ அழைக்கும் சலாம் வரஹ்..

   தங்கள் வருகைக்கும்,ஊக்கத்திற்கும் மிக்க நன்றி சகோதரி.

   Delete

Related Posts Plugin for WordPress, Blogger...