Wednesday, 25 January 2012

நமக்கு உரிமை இருக்கா ...?

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..
சமீப காலங்களில் அதிக அளவு தற்கொலை பற்றி கேள்விப்படுகிறோம் அதுவும், தான் மட்டும் சாகாமல் தான் இறந்து விட்டால் தன் மனைவி குழந்தைகள் என்ன செய்வார்கள் என்ற, நல்ல எண்ணத்தில் ..?அவர்களுக்கும் விஷம் கொடுத்து சாகடிப்பது அதிகளவு இருக்கிறது .ஒரு வேளை ஊடகங்களில் உதவியால் நமக்கு உடனே தெரிவது கூட காரணமாக இருக்கலாம் .இருந்தாலும் வருட வருடம் தற்கொலை பற்றிய கணக்கெடுப்பில் தற்கொலை செய்பவர்களின்  எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறதே தவிர குறைவது போல தெரிய வில்லை.

தற்கொலை செய்வதற்கு காரணம் என்னமோ வேறுவேறாக இருக்கலாம்..! ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு காரணம்..! ஆனால் அவர்கள் அனைவரும்  போகும் இடம் என்னவோ நரகம் தான்..  மிக எளிதாக எந்த கஷ்டமும்  இல்லாமல், அவர்கள் எத்தனை நல்அமல்கள் செய்து இருந்தாலும் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு அவர்களுக்கு கிடைத்து விடும்.


உங்களையே நீங்கள் கொன்று விடாதீர்கள்! (அல்குர்ஆன் 4:29)
உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்!  (அல்குர்ஆன் 2:195)


சோதனை மேல சோதனை வாழ ஒரு வழியும் தெரியல இருந்து என்ன செய்ய அதுக்கு சாவது மேல் என்றால் இந்த உலகத்தில் முக்கால் வாசி பேர் இல்லாமல் போய் இருப்பார்கள். யாருக்கு கஷ்டம் இல்லை.?நம்மை விட மேலாக இருப்பவர்களில் இருந்து நம்மை விடக் கீழே இருப்பவர்கள் வரை அவரவருக்கு ஏற்றார் போல் கஷ்டங்கள் உண்டு. இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவது தானே வாழ்க்கை..ஒரே இன்பமாக இருந்தால் நமக்கும் தான் வாழ்க்கை சலித்து விடாதா..?குறை இருக்கும் இடத்தில் தானே தேடல் இருக்கும்.வாழ்வின் தேடல் தானே நம்மை உயிர்ப்புடன் செயல் பட வைக்கிறது. 

ஓரளவு அச்சத்தாலும் பசியாலும் செல்வங்கள் உயிர்கள் மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! (2-155)

பொறுமையாளர்களுக்கு கணக்கின்றி கூலி வழங்கப்படும் (39-10) 

முஃமினான ஆண்களும் பெண்களும் தூய்மையானவர்களாக (பாவமற்ற நிலையில்) அல்லாஹ்வை சந்திக்க வேண்டுமென்பதற்காக அவர்கள் விஷயத்திலும் அவர்களின் பிள்ளைகள் விஷயத்திலும் அவர்களின் பொருள் விஷயத்திலும் அவர்கள் மரணிக்கும் வரை அவர்களுக்கு சோதனை வந்து கொண்டே இருக்கும். ஆதாரம்: திர்மிதி
நம்பிக்கை கொண்டோம் என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா?
(அல் குர்ஆன் 29:2)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
'யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகின்றானோ அவரை சோதனைக்கு உள்ளாக்குகின்றான்.'
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புஹாரி-5645

நமக்கு கிடைக்கும் துன்பம் கூட இரண்டு வகையில் இருக்கும்.நாமாக வரவழைத்துக் கொள்ளும் துன்பம் ஒன்று. தானாக வரும் துன்பம் ஒன்று படிக்கும் காலத்தில் படிக்காமல் வீணாக பொழுதைப் போக்கி விட்டு பரீட்சை சமயத்தில் தோல்வி அடைந்ததும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது முதல் வகை .இதில் முழுக் குற்றவாளி நாம் தாம் இரண்டாவது வகை எதிர்பாராமல் புயல்,மழை,விபத்து,போன்றவற்றால் நஷ்டம் ஏற்படுவது. இதில் நாம் ஒன்றும் செய்வதற்கு இல்லை .இந்த சமயத்தில் தான் நாம் விதியை நம்ப வேண்டும்..
நம்மை மீறி சொல்ல முடியாத  துன்பம் வரும் போது நம் துன்பம் எல்லாம் நம் விதி படி தான் நடக்கிறது என்று விதியின் பெயரைச் சொல்லி அதன் மீது பழியை போட்டு விட்டு  சமாதானம் செய்து கொள்ள வேண்டும். விதியை நம்புவது நம் ஒவ்வொருவருக்கும் ஆகுமானதாகும் பாரதூரமான துன்பம் வந்தால் அதை தாங்கி கொள்ளக் கூடிய  மன வலிமையை விதி நமக்கு அளிக்கிறது ..

இந்தப் பூமியிலோ,  உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது. உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (விதியை ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (57 : 22)

இந்த உலகத்தில் வாழக்கூடிய மனிதர்கள் அனைவரும்,என்னை ஏன் இப்படி சோதிக்கிற இறைவா,இதுக்கு நீ என்ன படைக்காமலே இருந்திருக்கலாமே,எனக்கு மட்டும் ஏன் தான் இப்படி நடக்குதோ,இந்த மாதிரி கஷ்டபடுறதுக்கு பதிலா போய் சேரலாம்,இவைகள்  நாம் நம் வாழ்நாளில் ஒரு முறையாவது நினைக்கும் வசனங்கள்.!இந்த உலகத்தில் நாம் மட்டும் தான் கஷ்ட படுவது போலவும் மற்றவர்களுக்கு அந்த அளவு துன்பம் இல்லை என்றும் நம் அனைவருக்கும் நினைப்பு ..!

ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம்., கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை.
அறிவிப்பவர்: அல்குத்ரி (ரலி), அபூஹுரைரா (ரலி)
நூல்: புஹாரி – 5641

நம் வாழ்க்கையே சொர்க்கம், நரகம் என்ற இரண்டை வைத்து தான் வலியுறுத்தப் பட்டு இருக்கிறது ..இதைத் தான் குரானும் நபி (ஸல் அவர்களில் வாழ்வும் நமக்கு சொல்லி கொடுக்கிறது.நம் அனைவரின் எண்ணமும் குறிக்கோளும் மறுமை எனும்நிரந்தரமான வாழ்க்கையில் சொர்க்கத்தை அடைவது தான்..!அதை நோக்கியே  நம் எல்லா இபாதத்துக்களும் நல் அமல்களும்,இன்ன பிற நல்ல செயல்களும்.

பெரும் பாவங்களை தவிர  நாம் அறிந்தோ அறியாமலோசெய்கின்றஅடுத்தவர்களை பாதிக்காத தவறுகளுக்கு அல்லாஹ் மன்னிப்பு உண்டு என்கிறான்.மனிதன் பலகீனமானவன் என்றும் அவன் செய்யும் தவறுகளுக்கு பாவ மன்னிப்பு கேட்டால் நான் அதை வழங்குவேன் என்றும் உறுதி கூறுகிறான்

(நபியே!) கூறுவீராக: தங்கள் ஆன்மாக்களுக்கு கொடுமை இழைத்துக் கொண்ட என் அடிமைகளே! அல்லாஹ்வின் கருணை பற்றி நம்பிக்கை இழந்து விடாதீர்கள். திண்ணமாக அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னித்து விடுகிறான்’(39:52) 


ஆனால் என்றும் மன்னிப்பு கிடைக்காத பாவங்களில் தற்கொலையும் ஒன்று ..

ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்துகொண்டார். உடனே அல்லாஹ், என் அடியான் அவனது மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்திவிட்டான்.  எனவே அவனுக்குச் சொர்க்கத்தை நான் ஹராமாக்கிவிட்டேன்  எனக் கூறினான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’
அறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி)நூல்:  புஹாரி-1364

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் கைபர் போரில் கலந்துகொண்டோம். அப்போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடன் இருந்தவர்களில் தம்மை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்ட ஒருவரைப் பற்றி இவர் நரகவாசிகளில் ஒருவர் என்று கூறினார்கள். போரிடும் நேரம் வந்தபோது அந்த மனிதர் மிகக் கடுமையாகப் போரிட்டார். அப்போது அவருக்கு நிறைய காயங்கள் ஏற்பட்டு அவரை உட்காரவைத்துவிட்டன. அப்போது நபித்தோழர்களி[ல் ஒருவர் வந்து அல்லாஹ்வின் தூதரே* தாங்கள் எவரைக் குறித்து அவர் நரகவாசி என்று சொன்னீர்களோ அவர் இறைவழியில் கடுமையாகப் போரிட்டு அதிகமான காயங்கள் அடைந்துள்ளார் என்று கூறினார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் அவர் நரகவாசிகளில் ஒருவர்தாம் என்றே கூறினார்கள். அப்போது முஸ்லிம்களில் சிலர் (நபி (ஸல்) அவர்களின் இச்சொல் குறித்து) சந்தேகப்படும் அளவுக்கு போய்விட்டார்கள். நிலைமை இவ்வாறு இருக்கும்போது, அந்த மனிதர காயத்தின் வேதனையை உணரலானார். உடனே அவர் தமது கையை அம்புக்கூட்டுக்குள் நுழைத்து அதிலிருந்து ஓர் அம்மை உருவி அதன் மூலம் தற்கொலை செய்துகொண்டார். உடனே முஸ்லிம்களில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விரைந்து வந்து அல்லாஹ்வின் தூதரே* தங்களின் அறிவிப்பை அல்லாஹ் உண்மையாக்கிவிட்டான். இன்ன மனிதர் தற்கொலை செய்து தம்மை மாய்த்துக் கொண்டார். (அதனால் அவர் நரகவாசிகளில் ஒருவராகிவிட்டார்) என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிலாலே* எழுந்து சென்று இறை நம்பிக்கையாளர் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழைய முடியாது. மேலும், அல்லாஹ் இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் மூலமாகவும் வலுவூட்டுகின்றான் என்று (மக்களிடையே) அறிவிப்புச் செய்யுங்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்:  புஹாரி 6606

யார் தமது கழுத்தை நெறித்துத் தற்கொலை செய்து கொள்கின்றாரோ, அவர் நரகத்திலும் தமது கழுத்தை நெறித்துக்கொண்டிருப்பார். யார் தம்மைத்தாம் (ஆயுதத்தால்) தாக்கித் தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் நரகத்திலும் தம்மை ஆயுதத்தால் தாக்கிக்கொண்டிருப்பார்.”
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: ஸஹீஹுல் புஹாரி-1365

தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்பட்ட ஒருவரின் கேள்வி..  என் உடம்பு  இது ..! இதை நான் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ள எனக்கு உரிமை இருக்கு இது குறித்து நீங்கள் என்ன கேட்பது என்று ..!உண்மையில் நம் உடம்பை நாம்என்ன வேண்டுமானாலும்செய்துகொள்ளஉரிமை இருக்கா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் .அப்படி இருந்திருந்தால் அல்லாஹ் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று சொல்லிருப்பான்.உங்கள் கைகளால் உங்களுக்கு அழிவை தேடிக் கொள்ளாதீர்கள் என சொல்லி இருக்க மாட்டான்.

நம் உடம்பு இறைவனின் அமானிதம் ஆகும். நமக்குக் கிடைக்கும் அன்பளிப்பை தான், நாம் என்ன வேண்டுமானாலும் செய்ய அனுமதி இருக்கிறது அமானிதப் பொருளுக்கு.அந்த உரிமை இல்லை .. ஒரு அமானிதப் பொருளை உரியவர் வந்து கேட்கும் வரை எப்படிப் பாதுகாத்து வைத்திருப்போமோ அப்படித் தான் நம் உடலையும் நல்ல முறையில் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். நம் உடலை வைத்து மார்க்கம் சொன்ன விதத்தில் நல் அமல்களைச் செய்ய மட்டுமே நமக்கு அனுமதி உண்டு. கொடுத்தவன் எப்போது விருப்பப் படுகிறானோ அப்போது அவனே ஒரு நொடி கூட தாமதிக்காமல் கொண்டு போய் விடுவான் ..
இதில் நம் விருப்பம் ஒன்றும் இல்லை ..

தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது 'நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்” என்று அவர்கள் கூறுவார்கள்.(2-156) 


எனவே நமக்கு என்ன துன்பம் ஏற்பட்டாலும்  தற்கொலை என்ற எண்ணத்தை கைவிட்டு எந்தத்  துன்பத்திலும் ஒரு நன்மை இருக்கு என்ற  வாக்கினை நினைவு கூர்ந்து நம்பிக்கையோடு அல்லாஹ்வை அதிகமதிகம் திக்ர் செய்து மீள வேண்டும் ..

(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!” (அல்-குர்ஆன் 13:28)


அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டி துன்பத்தைத் தாங்கக்கூடிய வலிமையை தந்து அருள்வானாக .ஆமீன் .


சகோதரி.
ஆயிஷா பேகம்.
7 comments:

 1. நல்ல பகிர்வு.வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 2. சலாம் சகோ ஆயிஷா,

  நல்லதொரு ஆக்கம். தற்கொலை செய்து கொள்வது ஒரு விதத்தில் கோழைத்தனம் தான். அல்லாஹ்வின் மீதும் இறுதி தீர்ப்பு நாளின் மீதும் நம்பிக்கை உள்ளவர்கள் ஒரு போதும் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள்.

  ReplyDelete
 3. atif-அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.

  தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ.

  ReplyDelete
 4. Asiya Omar--அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.

  எனக்கு மிக பிடித்தமான படித்தல் என்ற பசிக்கு இங்கு நிறைய தீனி

  உங்களைப் போன்ற தோழிகளின் பதிவுகள் வாயிலாக இருக்கிறது .

  மாஷா அல்லாஹ்.எத்தனை விசயங்கள்,மிக அழகாகவும் தெளிவாகவும்

  பதிவு செய்யப் பட்டு உள்ளது .இதைத் தாண்டி நான் என்ன செய்யப்

  போகிறேன் என்று உள்ளே மெதுவாக கேட்ட குரல் பதிவுகளை பார்க்க,

  பார்க்க அதிகமாகவே கேட்கிறது.

  தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .

  தங்களின் பதிவை என் முகப்புத்தக பக்கத்தில் பகிர்ந்து கொள்கிறேன் தோழி.

  ReplyDelete
 5. சிராஜ்-வ அழைக்கும் ஸலாம் வரஹ்.

  உண்மை தான் சகோ .சமீபத்தில் என் உறவில் நடந்த சம்பவம் தான்

  இந்த பதிவிற்கு காரணம்.அவர்கள் பெரும் நஷ்டவாளிகளாக

  இருப்பதைத் தாண்டி அவர்களின் பிள்ளைகள் படும் பாடு தாங்க

  முடியாததாக இருக்கிறது .மொத்தமாக மனோரீதியாக அவர்களின்

  இயல்பு நிலை மாறி விடுகிறது.பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைக்கும்

  யாரும் இந்த முடிவுக்கு வரமாட்டார்கள்.

  தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 6. சொடுக்கி கேளுங்க‌ள்

  >>>> 1. ஸ்பெயினில் 800 வருட இஸ்லாமிய பொன் ஆட்சி கால‌ சரித்திரம். . இருண்டிருந்த ஐரோப்பாவை இஸ்லாம் எப்படி ஒளி பெறச்செய்தது.” இன்று ஐரோப்பாவில் தோன்றியுள்ள நாகரிகத்துக்கு மூல காரணம், ஆழ்கடல்களைக் கடந்து சென்று ஸ்பெயினில் குடியேறிய முஸ்லிம்களின் கலைஞானமும், கல்வியுமே என்ற உண்மைதான் எத்தனை பேருக்குத் தெரியும்? <<<<<<

  சொடுக்கி கேளுங்க‌ள்

  2. >>>>>
  பிரமிப்பூட்டும் நேர் விவாதம். குர்ஆனா? பைபிளா? எதுஉண்மையான‌து? எது இறைவனின் வார்த்தைகள்? கிறிஸ்தவ அறிஞர் Dr.William Campbell X Dr. Zakir Naik.

  இறைவ‌னின் வார்த்தைக‌ளில் அசிங்கமோ, அபத்தமோ, விஞ்ஞான முரண்பாடுகளோ இருக்க முடியாது. யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் நோக்கம் இல்லை
  அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய விடியோக்கள்.
  . <<<<<

  .

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...