Saturday 7 January 2012

அதிக உரிமை யாருக்கு ..?



அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

மனிதர்களாகிய நாம் அனைவருமே உறவுகளாலும் நட்புகளாலும் ஒருவரை ஒருவர் சார்ந்தே இறைவனால் படைக்கப் பட்டுள்ளோம்.இதில் எந்த வேறுபாடும் கிடையாது. மனிதனிடம் கருணை காட்டாதவனுக்கு என்னுடைய கருணை கிடைக்காது என்பது ஏக இறைவனின் வாக்கு .

அதிலும் நம் அண்டை வீட்டில் வசிப்பவர்களுக்கு அதிக உரிமை இருப்பதாக நம் மார்க்கம் நமக்கு சொல்லித் தருகிறது. ஆனால் பொதுவாக நம் முதல் மனஸ்தாபமே அண்டை வீட்டுக்காரர்களிடம் தான் இருக்கிறது அதுவும் ஆண்களை விட பெண்களிடம் இந்த போக்கு அதிகம் காணபடுவதை நாம்  அதிகளவு நடை முறையில் பார்க்கிறோம் .

அதன் காரணம் என்னமோ பெரிய விசயமாக இருக்காது மிக சின்ன விசயமாக இருக்கும் அதன் பொருட்டு அவர்களிடம் சண்டை .போட்டு அவர்களிடம் பேச மாட்டார்கள்.ஆனால் இதன் காரணமாக  நமக்கு கிடைக்கும் தண்டனையை நினைத்துப் பார்த்தோம் எனில்  கண்டிப்பாக இத்தவறை செய்ய மாட்டோம். தொல்லை தரும் அண்டை வீட்டுக் காரர்களிடமும் பொறுமையாக இருப்போம். அல்லது முயற்சியாவது எடுப்போம் .

பொதுவாக மனிதர்கள் நாம் அனைவரும். குறை உள்ளவர்களே அடுத்தவர்களின் சில குறைகளை மறந்து நிறைகளை மட்டும் பார்க்க பழகி விட்டால் தேவை இல்லாமல் யாரிடமும் சண்டை போட மாட்டோம்.

இதன் அடிப்படையில் நம் உறவு முறைகளில் நம் அண்டை வீட்டார்களிடம் நாம் கொள்ள வேண்டிய உறவு முறைப் பற்றியும் உரிமைகளைப் பற்றியும் திருக்குர்ஆன் வசனங்களும் நபி மொழிகளும் நமக்கு அழகாக சொல்லி இருக்கின்றன

அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதை களுக்கும், ஏழைகளுக்கும், உறவினரான அண்டை வீட்டாருக்கும், உறவினரல்லாத அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 4:36)

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் தன் அண்டை வீட்டாருக்குத் தொந்தரவு தரவேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி), நூல்: புகாரீ (5187)

ஒருவர் தன் (வீட்டுச்) சுவரில் தன் அண்டை வீட்டுக்காரர் மரக்கட்டை பதிப்பதைத் தடுக்க வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூஹுரைரா (ர­) சொல்­ விட்டு ''என்ன இது! உங்களை இதை (நபிகளாரின் கட்டளையைப்) புறக்கணிப்பவர்களாக நான் பார்க்கின்றேனே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இந்த நபி வாக்கைத் தொடர்ந்து எடுத்துச் சொல்­லி க் கொண்டேயிருப்பேன்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அல்அஃரஜ் நூல்: புகாரீ (2463)


அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்.அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்'' என்று (மூன்று முறை) நபி (ஸல்) அவர்கள கூறினார்கள். ''அவன் யார்? அல்லாஹ்வின் தூதரே!'' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''எவனுடைய நாசவேலைகளி­ருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன்தான்'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஷுரைஹ் (ர­லி), நூல்: புகாரீ (6016)

எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! தமக்கு விரும்பியதை தன் அண்டை வீட்டாருக்கு அல்லது தன் சகோதரனுக்கு விரும்பாத வரை ஒரு அடியான் (உண்மையான) நம்பிக்கை கொண்டவனாக மாட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ர­லி) நூல்: முஸ்­லிம் (71)

அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர். அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்புச் செய்வது?'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''இருவரில் யார் வீட்டு வாசல் உனக்கு நெருக்கமாக இருக்கிறதோ அவருக்கு'' என்றார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ர­லி) நூல்: புகாரீ (2259)

முஸ்­லிம் பெண்களே! ஓர் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் குளம்பை (அன்பளிப்பாகக்) கொடுத்தாலும் அதை(க் கொடுப்பதையும் பெறுவதையும் அவர்கள்) இழிவாகக் கருத வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: புகாரீ (2566)

அபூதரே! நீ குழம்பு வைத்தால் அதில் தண்ணீரை அதிகப்படுத்து! உன் பக்கத்து வீட்டாரை (அதைக் கொடுத்து) கவனித்துக் கொள்!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ர­லி) நூல்: முஸ்­ம் (4758)

உன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டாருக்கு நன்மை செய்! நீ முஸ்­லிமாவாய்'' என்று நபிகளார் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: இப்னுமாஜா (4207)

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாரை கண்ணியப் படுத்தட்டும்!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: புகாரீ (6019)


'அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக்கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்குவாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன்'' என்று நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்.            அறிவிப்பவர்: ஆயிஷா (ர­லி)  நூல்: புகாரீ (6014)

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஒரு பெண்மணி அதிகம் தொழுகை,நோன்பு, தர்மம் செய்பவளாக கருதப்படுகிறாள் ஆனால் அவள் அண்டைவீட்டாருக்கு தன் நாவால் தொல்லை தருகிறாள். (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'இவள் நரகில் இருப்பாள்' என்றார்கள். இன்னொரு பெண்மணி குறைந்த நோன்பு, தர்மம், தொழுகை உடையவளாக இருக்கிறாள் என்று கருதப்படுகிறாள். அவள் தர்மம் செய்தால் வெண்ணைத் துண்டுகளைத்தான் தர்மம் செய்வாள். ஆனால் அவள் அண்டை வீட்டாருக்கு நாவால் தொல்லை தருவதில்லை. (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இவள் சுவர்க்கத்தில் இருப்பாள் என்றார்கள்.    அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி), நூல்: அஹ்மத் (9298)

ஒரு அடியானின் ஈமான் சரியாகாது, அவனுடைய உள்ளம் சரியாகும் வரை. அவனுடைய உள்ளம் சரியாகாது அவனுடைய நாவு சீராகும் வரை. யாருடை அண்டைவீட்டார் அவனின் நாசவேலையி­ருந்து பாதுகாப்புபெறவில்லையோ அந்த மனிதன் சுவர்க்கம் போக முடியாது என்று நபிகளார் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ர­லி), நூல்: அஹ்மத் (12575)

நான் நபி (ஸல்) அவர்களிடம் ''அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப்பெரியது எது?''என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க அவனுக்கு நீ இணைகற்பிப்பது'' என்று சொன்னார்கள். நான், ''நிச்சயமாக அது மிகப் பெரியகுற்றம்தான்'' என்று சொல்­விட்டு ''பிறகு எது?'' என்று கேட்டேன். ''உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குப்போட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது'' என்று சொன்னார்கள். நான், ''பிறகு எது?'' என்று கேட்க, அவர்கள், ''உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ர­லி), நூல்: புகாரீ (4477)

நம் அனைவருக்கும் வேறுபாடு இல்லாமல் அனைவரையும் நேசிக்கும் தன்மையையும் .மன்னிக்கும் பண்பையும்  ,தூய்மையான எண்ணங்களையும் நல்ல பொறுமையையும் உதவி செய்யும் மனப்பாண்பையும் எல்லாம் வல்ல இறைவன் தந்து அருள்வானாக ..ஆமீன் ..


சகோதரி
ஆயிஷா பேகம்

15 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி!
    அழகிய உபதேசங்கள் இஸ்லாத்தில்...
    அவசிய நினைவூட்டல்கள் இக்காலத்தில்..
    ஜஸாக்கல்லாஹு கைர்!!

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வே

    நல்லாதான் சொல்லிரீகீக வே ... மற்ற படி

    நான் ஹதீஸ் நம்பர் உடன் சொல்றேன்...

    முஹம்மத் நபி (ஸல்) said..."மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்" [ஸஹீஹ் புஹாரி # 7376 ]

    பதிவு நன்னாயிருக்கு ... எனினும் து ஆ செய்யுங்க வே .. நான் இக்கட்டான சூழ்நிலையில் தற்போது ..

    தொடரட்டும் வே உங்கள் பணி ... இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.ஆயிஷா பேகம், தலைப்பிற்கு ஏற்ற மிக அருமையான ஹதீஸ்களை அழகுற தொகுத்தளித்தமைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ஆயிஷா,

    மாஷா அல்லாஹ். அண்டை வீட்டாருடன் நல்லுறவை பேண வேண்டும் என்பதை ஹதீஸ்கள் வாயிலாக அருமையாக கூறி உள்ளீர்கள்.

    ReplyDelete
  5. /*
    அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர். அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்புச் செய்வது?'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''இருவரில் யார் வீட்டு வாசல் உனக்கு நெருக்கமாக இருக்கிறதோ அவருக்கு'' என்றார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ர­லி) நூல்: புகாரீ (2259)
    */

    இஸ்லாம் மாற்று மதத்தினரை கொல்லச் சொல்கிறது என்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம். அருகில் இருக்கும் முஸ்லிமிற்கு கொடு என்று நபி ஸல் அவர்கள் சொல்லவில்லை. மாறாக நெருக்கமாக இருப்பவருக்கு கொடு என்று பொதுவாகவே கூறி உள்ளார்கள். இதைலாம் எங்க பார்க்க போறாங்க. அல்லாஹ் தான் நேர்வழி கொடுக்கணும்.

    ReplyDelete
  6. zalha- வ அழைக்கும் சலாம் வரஹ்..

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..சகோ.

    ReplyDelete
  7. சிந்தனை- வ அழைக்கும் சலாம் வரஹ்..

    இன்ஷா அல்லாஹ்..அல்லாஹ் நம் அனைவரின் துஆக்களையும் கபூல் செய்வானாக.ஆமின்.
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.சகோ.

    ReplyDelete
  8. ~முஹம்மத் ஆஷிக் citizen of world-வ அழைக்கும் சலாம் வரஹ்..

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.சகோ.

    ReplyDelete
  9. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி!

    அழகிய உபதேசங்கள்.

    ReplyDelete
  10. சிராஜ்-வ அழைக்கும் சலாம் வரஹ்..

    \\இஸ்லாம் மாற்று மதத்தினரை கொல்லச் சொல்கிறது என்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம். அருகில் இருக்கும் முஸ்லிமிற்கு கொடு என்று நபி ஸல் அவர்கள் சொல்லவில்லை. மாறாக நெருக்கமாக இருப்பவருக்கு கொடு என்று பொதுவாகவே கூறி உள்ளார்கள்\\

    தங்களின் ஆதங்கம் புரிகிறது சகோ.ஆனால் தூங்குபவர்களைத் தான் எழுப்ப முடியும்..
    தூங்குபவர்கள் போல் நடிப்பவர்களை என்ன செய்ய முடியும்.பொதுவாக இஸ்லாத்தில் நான்கு கல்யாணம் பண்ணுவது மிக எளிதாக விமரிசிக்கப் படுகிறது இங்கு அப்படி எத்தனை பேரை பார்த்தார்கள் என்று தான் தெரிய வில்லை.

    இந்த நேரத்தில்..ஒரு கல்யாணத்தை பண்ணிட்டே படும்பாடு பெரும்பாடா இருக்கு என்ற பல சகோதரர்களின் மனக் குரலையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்..:-))

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.சகோ.

    ReplyDelete
  11. சுவனப்பிரியன்-வ அழைக்கும் சலாம் வரஹ்..

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..சகோ.

    ReplyDelete
  12. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

    அருமையான பதிவு,

    இது போன்ற உன்னத மார்க்கத்தில் நம்மைச் சேர்த்த அந்த கருணையாளனுக்கே எல்லாப் புகழும்.

    உங்கள் பணிக்கு இறைவன் நற்கூலி வழங்குவானாக, ஆமீன்...

    ReplyDelete
  13. Syed Ibramsha-வ அழைக்கும் சலாம் வரஹ்.

    எல்லாம் புகழும் அல்லாஹுக்கே..

    தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி.சகோ.

    ReplyDelete
  14. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி

    அருமையான பகிர்வு .

    இறைப்பணி இறையருளால் மென்மேலும் சிறக்க என்
    துஆக்கள்

    ReplyDelete
  15. ஆயிஷா அபுல்-வ அழைக்கும் சலாம் வரஹ்.

    தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும், துஆக்கும் மிக்க நன்றி.சகோதரி.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...